உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரேசிலின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு

பிரேசிலின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரேசிலியா: ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு, பிரேசிலியாவிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அல்வோராடா மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பிரேசிலின் உயரிய 'Grand Collar of the National Order of the Southern Cross', விருதை அந்நாட்டு அதிபர் லுாலா டி சில்வா வழங்கி கவுரவித்தார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இதற்கு முன் 3 முறை பிரேசில் சென்றுள்ளார். முதலாவதாக ஜூலை 2014ம் ஆண்டில் சென்றார். அதைத் தொடர்ந்து 2019ல் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மற்றொரு பயணம், கடந்த ஆண்டு நவம்பரில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என 3 முறை சென்றுள்ளார்.இந்நிலையில் தற்போது ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மீண்டும் பிரேசில் சென்றார். மாநாட்டுக்கு பிறகு, பிரதமர் மோடி, பிரேசிலியா நகரில் உள்ள அல்வோராடா மாளிகைக்கு சென்றார்.அப்போது பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் அதிபர் லுாலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று மோடிக்கு வரவேற்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு, 'Grand Collar of the National Order of the Southern Cross' என்ற பிரேசிலின் உயரிய விருதை அந்நாட்டு அதிபர் லூலா டி சில்வா வழங்கி கவுரவித்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிரினிடாட் மற்றும் டுபாகோ நாட்டின் உயரிய விருதான 'தி ஆர்டர் ஆப் தி டிரினிடாட் அண்டு டொபாகோ குடியரசு விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mecca Shivan
ஜூலை 09, 2025 10:17

அமெரிக்காவை வழிக்கு கொண்டுவர தென்னமெரிக்க நாடுகளுக்கான சுற்று பயணம் தேவையான ஒன்று . மேலும் தென்னமெரிக்க நாடுகளில் இயற்கை வளமும் தாதுக்களும் அதிகளவில் உள்ளன.. இது நமது சீனாவை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற உதவும்


விருதுபாபு
ஜூலை 09, 2025 06:05

அடுத்த விருது நமிபியாவில் காத்திருக்கு. க்ராண்ட் ஆர்டர் அப் தி ஸ்டார் அப் தி ஆப்பீசர் ஆப் நமிபியா ந்னு பேராம்.


அப்பாவி
ஜூலை 09, 2025 05:54

விருது கன்ஃபார்ம் ஆனாதான் வெளியே கெளம்புவாரு. 5 ல மூணு தேறிடிச்சு. 140 கோடி பேருக்கும்.பிரிச்சு குடுத்துடுவாரு.


Kasimani Baskaran
ஜூலை 09, 2025 04:06

இந்தியாவை பெருமைப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. பணம் கொடுத்து மாடல் அரசு ஆப்ரிக்க நங்கையர்களுடன் நடன நிகழ்ச்சி மூலம் தனக்குத்தானே சூடு வைத்துக்கொள்ளும்... இளையவர், அல்லது சின்னவர் அல்லது பெரியவர் யாராவது ஒருவர் கெளரவிக்கப்படுவார்கள்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 08, 2025 20:55

நமது பிரதமருக்கு கிடைக்கும், வரவேற்புகள், பதக்கங்கள், பரிசுகள் அவருக்கு பெருமை சேர்க்கும். காங்கிரஸ்காரர்களுக்கு பொறாமை கொள்ள வைக்கும்.


sankaranarayanan
ஜூலை 08, 2025 20:42

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கே கிடைக்காத வரவேற்பு மோடிக்கு கிடைத்துள்ளது இது இந்தியாவின் பெருமை


V RAMASWAMY
ஜூலை 08, 2025 20:37

நம் நாட்டிற்கும் நம் பிரதமருக்கும் பெருமையோ பெருமை. 2014 க்கு மின்பில்லா பெருமைகளை அள்ளி அள்ளிக் குவித்துக்கொண்டிருக்கும் இவரை பிரதாரமாகக் கொண்டுள்ள நமக்கு பெருமிதம்.


புதிய வீடியோ