உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு; பிரதமர் மோடி மகிழ்ச்சி

டிரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு; பிரதமர் மோடி மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக இருந்தது. இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்' என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை, உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தன் குடும்பத்துடன் சந்தித்தார். பின்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரும், அமெரிக்க ஆளுங்கட்சி முக்கியஸ்தருமான விவேக் ராமசாமி சந்தித்து பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bnxal09e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் இன்று அதிகாலை சந்தித்து பேசினார். வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பிற்குப் பின், பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டிரம்ப் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக இருந்தது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.அதிபர் டிரம்ப் எப்போதும் மகா என்று குறிப்பிட்டு பேசுகிறார். நாங்கள் இந்தியாவில் விக்ஷித் பாரத் என்று குறிப்பிடுகிறோம். இந்த இரண்டும் சேரும் போது, இந்தியாவும் அமெரிக்காவும் வளம் பெறுவதற்கான மெகா கூட்டணி உருவாகும்' என்று மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.தாயகம் திரும்பினார் மோடிஅமெரிக்கா பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு, பிரதமர் மோடி தாயகம் திரும்பினார். அவரை விமான நிலையத்தில், அந்நாட்டு உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

T. K. CHANDRASEKARAN, TIRUPUR
பிப் 15, 2025 06:40

OH MY GOD EXPRESSION WITH TRUMPS MEET


காத்தமுத்து
பிப் 14, 2025 12:02

இப்போ என்ன நடக்கப் போகுதோ?


sivakumar Thappali Krishnamoorthy
பிப் 14, 2025 11:22

இத்தாலி எட்னா எரிமலை எப்போ வெடித்து உருகியது போல இங்கு உள்ள எதிர்களின் வயிறு எரிகின்ற்து .


ஜீவன்லால்
பிப் 14, 2025 09:41

இனிமேல மேக் அமெரிக்கா க்ரேட் எகைன் என்பது மேக் அமெரிக்கா அண்ட் இந்தியா கிரேட் எகைன் நு அழைப்பாங்களோ?


அனுராம்
பிப் 14, 2025 09:39

அமெரிக்கா செய்தியாளர்களைத்தான் சந்திப்பாரு. இந்த ஊரில் கேள்வி கேப்பாய்ங்களே.


veera
பிப் 14, 2025 11:53

ஆமாம் இங்கே கெனைதனமா கேள்வி கேட்பாங்க


முக்கிய வீடியோ