உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏப்ரல் 5ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம்: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு

ஏப்ரல் 5ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம்: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகே தெரிவித்தார்.2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இலங்கை அதிபராக அனுரா திசநாயகே பதவியேற்றார். பின்னர் அவர், கடந்த டிசம்பர் மாதம், புதுடில்லிக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு விருந்தளித்தார். மேலும் இரு நாட்டு தலைவர்களும் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.இந்நிலையில், முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகே தெரிவித்தார். அவர், திருகோணமலையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இந்தியப் பிரதமரின் வருகையின் போது தொடங்கும் என்றும் உறுதிப்படுத்தினார். இந்த அறிவிப்பை பார்லிமென்டில் உரையாற்றும்போது அதிபர் அனுரா திசநாயகே கூறியுள்ளார்.பிரதமரின் பயணம் குறித்து, சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ கூறியதாவது: இலங்கையிலும் இந்தியாவிலும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவது தொடர்பான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. பிரதமர் மோடியின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் 50 மெகாவாட் (நிலை 1) மற்றும் 70 மெகாவாட் (நிலை 2) திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை திருகோணமலையில் உள்ள சம்பூரில் தொடங்கப்படவுள்ளது.இலங்கை மின்சார வாரியம் மற்றும் இந்திய தேசிய வெப்ப மின் கழகம் இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியில் நடக்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sankaranarayanan
மார் 22, 2025 08:06

கலைஞரால் கொடுக்கப்பட்ட கச்சத்தீவு திரும்பவும் தமிழ் நாட்டிற்கு கிடைக்குமா என்று எல்லா கட்சிகளும் சேர்ந்து பிரதமரிடம் வேண்டுகோள் விடலாமே நல்ல தருணம் நழுவ விடாமல் நமது முதல்வர் உடனே பிரதமரை எல்லா கட்சி தலைவர்களுடன் சேர்ந்து டெல்லி சென்று நேரில் சந்தித்து பேசலாமே


Oviya Vijay
மார் 22, 2025 07:54

இரண்டு முறை முழுமையாக மத்தியில் ஆட்சியில் இருந்தும் மூன்றாவது முறையாக பொறுப்பேற்றும் இந்தியாவில் வாழும் தமிழக மீனவர்கள் பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியவில்லையெனில் இதை விட உங்களது கையாளாகத் தனத்திற்கு எடுத்துக்காட்டு வேறெதையும் சொல்ல வேண்டியதில்லை... கேட்டால் என்றோ நடந்த பழங்கதைகளைப் பேசிக்கொண்டுள்ளீர்கள்... தற்போதைய நிலையில் மீனவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்... அவ்வாறு செய்ய முடியாவிட்டால் நீங்கள் ஆட்சியில் இருந்து என்ன பயன்... தமிழகமும் இந்தியாவின் ஒரு மாநிலம் தானே... தூதரக ரீதியில் இரு நாட்டு மீனவர்கள் மத்தியில் அடிக்கடி சந்திப்புக்கு ஏற்பாடு... கடலில் நம் நாட்டுக்குரிய எல்லையை நம் மீனவர்கள் கண்டுபிடிக்க எளிதான வழிமுறைகள். இவையெல்லாம் நம் எல்லையை நம் மீனவர்கள் எளிதாக அறிந்து கொண்டு எல்லை தாண்டாமல் இருக்க முடியும். அவர்களுக்கு வழிகாட்ட நிரந்தர இந்திய கடற்படையின் ரோந்து உதவி... இவை தான் இப்போதைய பிரச்சனைக்கு மிகவும் தேவையான வழிமுறைகள்... வேண்டுமென்றே எல்லை தாண்டி மாட்டிக்கொண்டு லட்சக்கணக்கில் அபராதம் செலுத்த நம் மீனவர்களுக்கு என்ன தலையெழுத்தா??? லட்சக்கணக்கான மதிப்பிலான படகுகளை அவர்கள் நம் மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்து நமக்கு திரும்ப கிடைக்காமல் அது அங்கேயே ஏலம் விடப்படுகிறது... நம் மீனவர்கள் மீது குறைகள் இருப்பின் அதை கலந்து பேசி நிவர்த்தி செய்ய துப்பில்லாமல் மத்திய அரசில் மூன்றாவது முறையாக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து என்ன பிரயோஜனம்...


vivek
மார் 22, 2025 09:38

ஓ....கச்சத்தீவு தாரை வார்த்தது திருட்டு திராவிடம் என்பது இந்த 200 ரூபாய் முட்டுக்கு தெரியுமா


vivek
மார் 22, 2025 09:42

ஓ ..... ...உடனே 22 மாநில முதல்வர்கள கூப்பிட்டு தீர்வு அல்லது உண்ணாவிரதம் இருக்கவும்


Kannan
மார் 22, 2025 09:52

Before handing over of the Kachativu, there was no problem for our fishermen to fish there. Once handed over the boundary line has gone with Sri Lanka and hence the fishermen who wander in their waters are getting arrested. Prior to 2014, there used to be shooting at the fishermen who wandered into the waters of Sri Lanka and there were deaths.. Compared to that now those who wander are getting arrested and released after the interference of our External Affairs Ministry. This situation is due to the fishermen of Sri Lanka who are objecting to the fishing methods that our fishermen are adopting, our fishermen use different types of fishing nets that catch all types of fish either grown or juvenile. If juvenile are caught then ultimately there could be a loss of fish breeding in due course. That is why at the behest of their fishermen their government is practising the arrests. If our fishermen are avoiding such methods then the problem will be solved.


Mohanakrishnan
மார் 22, 2025 18:17

செய்வதெல்லாம் செய்துவிட்டு ஊளையிடும் குரைக்கும் கூட்டம் நல்ல காமடி


Bala
மார் 22, 2025 07:47

ராமநாதபுர மாவட்டம் தரிசாக உள்ள நிலத்தில் சூர்யா மின்சாரம் தயாரித்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்தால் குடுமி நம்மிடம்


சமீபத்திய செய்தி