உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிங்கப்பூரில் 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது ஆளுங்கட்சி

சிங்கப்பூரில் 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது ஆளுங்கட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில், ஆளும் பிஏபி கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அக்கட்சியின் லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார். சிங்கப்பூரில் இன்று (மே 03) பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடந்தது. ஆளும் கட்சி 32 புதிய முகங்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்தது. 30 லட்சம் பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றனர். 2024ம் ஆண்டு தரவுகளின் படி சிங்கப்பூர் மக்கள் தொகையில் இந்தியர்கள் 7.6 சதவீதமும், மலாய் மக்கள் 15.1 சதவீதமும், சீனர்கள் 75.6 சதவீதமும் உள்ளனர். 97 இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து ஓட்டளித்தனர். தேர்தல் முடிந்த நிலையில் உடனடியாக ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில், ஆளும் மக்கள் செயல் கட்சி(பிஏபி) 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87ல் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமர் ஆவார்.எதிர்க்கட்சியான பிரீத்தம் சிங் தலைமையிலான எதிர்க்கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட்டு 10 ல் வெற்றி பெற்றது.ரவி பிலிமேன் தலைமையிலான ஆர்டியு கட்சி 15 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சண்முகம்
மே 03, 2025 19:58

சிங்கபுரியில் ஒரே கட்சி தான். ஆட்சி அவர்களுக்கே. மக்கள் நலனை பேண அந்த அமைப்பு நன்றாகவே வேலை செய்கிறது.


Kasimani Baskaran
மே 03, 2025 11:44

அல்ல...


Nada Rajan
மே 03, 2025 10:26

சீனியர் ஜுனியர் பாகுபாடு தவிர்க்கவும் ..... அங்க குடும்ப ஆட்சி நடக்கிறது.. அப்பா மகன் என்றே.


Nada Rajan
மே 03, 2025 10:25

அங்கு நடப்பது வாரிசு அரசியல்


Kasimani Baskaran
மே 03, 2025 09:45

பிஏபி தான்.


புதிய வீடியோ