உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போப் லியோவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை: நலமுடன் இருப்பதாக வாடிகன் தகவல்

போப் லியோவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை: நலமுடன் இருப்பதாக வாடிகன் தகவல்

​ரோம்: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் லியோவுக்கு, ரோமில் உள்ள மருத்துவமனையில், வெற்றிகரமாக நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் பூரண நலமுடன் தேறி வருவதாக, வாடிகன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருப்பவர் போப் லியோ, வாடிகன் நகரத்தில் வசித்து வருகிறார். நுரையீரலில் அவருக்கு கட்டி இருப்பதை சமீபத்தில் டாக்டர்கள் கண்டறிந்தனர். ஆரம்ப நிலையிலேயே இது கண்டறியப்பட்டது. அதனை அகற்ற அறுவை சிகிச்சை வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக, வாடிகன் அறிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jfec5nuq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

புற்றுநோய்:

வாடிகன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை: போப் லியோவுக்கு வலது பக்க நுரையீரலில் கட்டி இருப்பது முந்தைய பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, திட்டமிட்டபடி அதிநவீன தொழில்நுட்பம் மூலம் அவரது வலது நுரையீரலின் கீழ்ப்பகுதி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சையின்போது மேற்கொள்ளப்பட்ட திசுப் பரிசோதனையில், அவருக்கு நுரையீரல் அடினோகார்சினோமா புற்றுநோய் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. ​சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையில் எந்தவித சிக்கல்களும் இன்றி மருத்துவர்கள் திறம்பட முடித்துள்ளனர்.

ஓய்வு:

அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண்விழித்து சுயநினைவுக்கு வந்த போப் லியோ, இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார். இரவு உணவருந்திய அவர், தனது தனிச் செயலாளர்கள் மற்றும் வாடிகன் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். மருத்துவமனையில், ஒருவாரம் ஓய்வில் இருக்கும் போப் லியோவுக்கு, அகற்றப்பட்ட திசுக்கள் குறித்து அடுத்த சில தினங்களில் கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
அக் 14, 2026 21:36

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் லியோவுக்கே அறுவை சிகிச்சை. ஆனால் இந்தியாவில் ஒரு சில அந்த மத போதகர்கள் தீராத வியாதியை குணப்படுத்துவோம் என்று கூறி, அப்பாவி மக்களின் தலை மீது கை வைப்பதும், உடனே அவர்கள் பேய் பிடித்தது போல ஆடி, சிறிது நேரத்தில் அடங்குவதும், அடங்கியவர்களை பார்த்து அந்த மத பாதகர் பாருங்கள் அவர் நோயை நான் குணப்படுத்திவிட்டேன் என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றுவதும், அப்பாவி மக்களும் அவர்களை நம்பி ஏமாறுவதும் ... ஒரு கேலிக்கூத்துதான் போங்க.


Ramanujadasan
அக் 14, 2026 11:55

தமிழகத்திலும் ஏன் இந்த உலகத்திலும் உள்ள சில மத பிரச்சாரகர்கள் இயேசு கிருத்துவையே உயிர்த்தெழ வைக்க கூடிய சக்தி படைத்தவர்கள் . அவர்களிடம் வேண்டி கொண்டால் , ஒரு தசம பாகம் காணிக்கை கொடுத்தால் போதும் , புற்று நோயானது ஒன்றாவது . அமர ஜீவிதம் கிடைக்குமே


Ramanujadasan
அக் 14, 2026 11:15

இங்கே சில குருடர்களை பார்க்க வைக்கிறார்கள், முடவர்களை ஓட வைக்கிறார்கள், , புற்று நோயை குணப்படுத்துகிறார்கள் , கட்டிகளை நீக்குகிறார்கள் வெறும் இரண்டு நிமிடத்தில் . போப்பும் இங்கே வந்து அவர்களிடம் மருத்துவ சிகிச்சை பெறலாமே ?


குமார் மதுரை
அக் 14, 2026 08:44

இங்க சிடி வைத்தியம் இருக்கு. நாலுமாவடி டாக்டர் அஞ்சே நிமிஷத்தில் குணப்படுத்திருவாரு, அறுவை சிகிச்சையே வேண்டியதில்லை. அஞ்சு வருஷமா இருக்குற அரைகிலோ கட்டி அஞ்சு செகண்ட்ல கண்ண மூடி கைய வச்சா காணாம போய்டும்.


ஜெகதீசன்
அக் 14, 2026 11:05

சபாஷ் குமார். நல்ல பதிவு.


Barakat Ali
அக் 14, 2026 08:42

எதுக்கு ட்ரீட்மெண்ட்டு ?? எதுக்கு சர்ஜரி ?? இவர் செய்யும் ஒரு ஜபம் / பிரார்த்தனை மூலம் சரி பண்ணிட மாட்டாரா ஜீசஸ் அவர்கள் ?? அய்யப்பன் கோவில் போகுற வேன் கவுந்துட்டா வீரமணியின் விடுதலை ஏடு அய்யப்பன் ஏன் பக்தர்களைக் காப்பாத்தலை? என்று கேட்குதே ?? இதுக்கெல்லாம் குரல் எழும்பாதே ??


Ramanujadasan
அக் 14, 2026 11:27

அய்யப்பன் பக்தர்கள் எச்சை சோறு போட மாட்டாங்களே ? எங்கே எச்ச சோறு கிடைக்குதோ அங்கே வாலாட்டுவார்கள் விடுதலை கும்பல்கள்


Perumal Pillai
அக் 14, 2026 07:34

ஓ அப்படியா ?


புதிய வீடியோ