உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆபத்தில் ஆழ்த்தும் போரை தவிர்க்க வேண்டும்; போப் லியோ வேண்டுகோள்

ஆபத்தில் ஆழ்த்தும் போரை தவிர்க்க வேண்டும்; போப் லியோ வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரோம்: போர் பிரச்னைகளை தீர்க்காது. ஆபத்தில் ஆழ்த்தும் போரை தவிர்க்க வேண்டும் என மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில் போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: போர் பிரச்னைகளைத் தீர்க்காது. மாறாக, பெரிய காயங்களை ஏற்படுத்துகிறது. வன்முறை மற்றும் மோதல் வேண்டாம். அபாயத்தை ஏற்படுத்தும் போரைத் தவிர்க்க சர்வதேச சமூகம் பாடுபட வேண்டும். மோதலுக்குப் பதிலாக ராஜதந்திரம் இருக்க வேண்டும்.போரின் துயரம் சரிசெய்ய முடியாத படுகுழியாக மாறுவதற்கு முன்பு அதை தடுக்க வேண்டும். மத்திய கிழக்கிலிருந்து, குறிப்பாக ஈரானிலிருந்து, தொடர்ந்து அச்சமூட்டும் செய்திகள் வெளிவருகின்றன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் உள்ளிட்ட இந்த துயரமான பின்னணியில், குறிப்பாக காசாவில் மனிதாபிமான உதவிக்கான தேவை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ