உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 சதவீதம் வரி; சீனாவுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 சதவீதம் வரி; சீனாவுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் , சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீனா மீது அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டது. ஆனால் தனது நிர்வாகம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பொறுத்துக் கொள்ளாது. சீனா எங்களை மிகவும் மதிக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் 55 சதவீத வரிகளை செலுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இது நிறைய பணம். தற்போது அவர்களுக்கு புதிய வரிகளை விதிக்கலாம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ak2vhnft&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

155 சதவீத வரி

அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் 1ம் தேதி முதல் சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும். அமெரிக்கா புதிய ஏற்றுமதி தடைகளை விதிக்கும். மலேசியாவில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், சீனா பொறுப்புடன் செயல்பட வேண்டும். கடந்த காலங்களில் பல நாடுகள் அமெரிக்காவை சாதகமாக பயன்படுத்திக் கொண்டன, ஆனால் அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. அவர்களால் இனி சாதகமாகப் பயன்படுத்த முடியாது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை

மேலும், அதிபர் டிரம்ப் கூறியதாவது: இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை ஹமாஸ் நிலைநிறுத்த வேண்டும். நல்லவராக இருங்கள் இல்லையெனில் நீங்கள் அழிக்கப்படுவீர்கள். வன்முறை விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.வன்முறை குறையும் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு ஒரு சிறிய வாய்ப்பு கொடுக்கும். ஆனால் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தினால் பதிலடி கொடுப்போம். ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை களைவதாக உறுதியளித்தது. ஆனால் காலக்கெடு நிர்ணயிக்கப் படவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டால், நாங்கள் அதைச் செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

சூர்யா
அக் 21, 2025 19:47

இன்னக்கி கைலாசா நாட்டின் அதிபர் கூட மாத்தி, மாத்தி பேசும் டிரம்ப் பேச்சை கேட்க மாட்டார்.


ரவி
அக் 21, 2025 19:41

அண்ணே அப்படித்தான் அப்பப்ப மிரட்டுவேன்! சீன அதிபர்ட்டே பேசினேன் வரிவிதிப்புக்கு ஒத்துக்கிட்டார்னும் நாளைக்கு எதாச்சும் சொல்லுவேன். அதெல்லாம் கண்டுக்கப்படாது! அண்ணன பத்தி உங்களுக்கு தெரியாதா? அடக்கிப் பார்ப்பேன் ! இல்லன்னா அடங்கி போயிருவேன்! எப்படி நம்ம பாலிசி?


தாமரை மலர்கிறது
அக் 21, 2025 18:57

எவன் ஒருவன் எதிரியை கண்டு கதறுகிறானோ, குமுறுக்கிறனோ, அவன் தான் பலவீனமானவன்.


visu
அக் 21, 2025 15:40

பதிலுக்கு சீனா ஏற்றுமதியை நிறுத்தினாலே அமெரிக்கா திண்டாடும் எல்லாவற்றையும் சீனாவிலிருந்துதான் வாங்குகிறார்கள்


Rajasekar Jayaraman
அக் 21, 2025 11:23

மோடி மாதிரி நடப்பதாக நினைத்துக் கொண்டு கோமாளித்தனம் செய்யும் டிரம்ப்.


Senthoora
அக் 21, 2025 12:55

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க,


Rajasekar Jayaraman
அக் 21, 2025 11:21

உலக நாடுகள் சேர்ந்து அமெரிக்காவை தனிமை படுத்துங்கள்


Senthoora
அக் 21, 2025 12:57

பூனைக்கு யார் மணிக்கட்டுவது. இப்படிக்கு எலிகள் புலம்பல்.


RAVINDRAN.G
அக் 21, 2025 10:22

டிரம்ப்: என்னப்பா ஷீ ஜின் பிங் அண்ணனை பார்த்து கொஞ்சம்கூட பயம் இல்லையா? ஷீ ஜின் பிங் : யாரு ட்ரம்பா மிரட்டு மிரட்டு


Ravi Chandran.K ,Pudukkottai
அக் 21, 2025 09:43

ஹலோ ! எக்ஸ்கியூஸ் மீ! இந்த அட்ரச கொஞ்சம் சொல்ல முடியுமா? ஒசாமா பின் லேடன், கேர் ஆப் முல்லா ஓமர், இந்துகுஸ் மலை, காபூல், ஆப்கானிஸ்தான் என ஒரு திரைப்படத்தில் வடிவேலுவிடம் அட்ரஸ் கேட்பவர் போலத்தான் இன்றைய டிரம்ப்பும் இருக்கிறார்.


Naga Subramanian
அக் 21, 2025 09:21

"எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்" என்ற விவேக் அவர்களின் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. கண்முன்னே அழியும் தேசத்தைக் கண்டு களியுங்கள்.


சுந்தர்
அக் 21, 2025 09:06

ட்ரம்ப்க்கு யாராவது 144 போடுங்க ப்ளீஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை