உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

வாஷிங்டன்: ‛குவாட்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று(செப்.,21) அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடக்கிறது. ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ( 21ம் தேதி ) அமெரிக்கா செல்கிறார்.இந்த அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும். அடுத்த நாள், நியூயார்க் நகரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். செப்.,23ம் தேதி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்த பயணத்தின் போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

மோடி தாசன்
செப் 21, 2024 23:05

வாழ்த்துக்கள் மோடி அய்யா. உங்களை ஏசுகிற கும்பல் எல்லாமே 21ம் பக்கத்தை சேர்ந்தவர்கள். உங்கள் பணி தொடரட்டும்.


N Sasikumar Yadhav
செப் 21, 2024 19:59

என்ன இருந்தாலும் நமது திராவிட மாடல் மொதல்வர் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு கொண்டு வந்ததை போல இருக்குமா மோடிஜியோட அமெரிக்க பயணம்


வல்லவன்
செப் 21, 2024 15:49

தண்ட செலவு


பாமரன்
செப் 21, 2024 09:43

உள்நாட்டில் தேர்தல் திருவிழாவுக்கு இன்டர்வெல்...மணிப்பூர்ல ட்ரோன்லாம் யூஸ் பண்ணி குண்டு போட்டு மிகவும் அமைதியான முறையில் கலவரம் பண்றாங்கலாம்... இங்கே இருந்தா ஏன் அங்கு போகலை...அத பத்தி பேசலன்னு ரெம்ப கேள்வி கேக்குறாங்கப்பா... அதான் இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே அமிரிக்க அதிபராக இருக்க போகும் பைடன் கூட இம்பார்டண்ட் மேட்டர் டிஸ்கிஸ் பண்ண போறேன்... வழக்கம் போல பகோடாஸ் பீப்பி ஊதனும்... எவனாவது வீடியோ கான்ஃபரன்ஸ்ல பேசலாமேன்னு கேட்டா அவனை டீம்கா ஆளுன்னு ஐடெண்டிஃபை பண்ணி திட்டி தீர்க்கனும்... வர்ட்டா... எட்ரா ஃப்ளைட்டை...உக்காந்து ஃபைல் பாக்கும் ஃபோட்டோ ஷூட் இருக்கு....


SUBBU,MADURAI
செப் 21, 2024 05:10

Current US Biden Government has started playing leftist toolkit i.e. Anti Trump of witch hunting top notch voices of true Americans there just before PM Modi visit. And Same agenda driven anti India toolkit would emerge in India.


Natarajan Ramanathan
செப் 21, 2024 03:55

WELCOME MODIJI


Barakat Ali
செப் 21, 2024 07:57

நீங்க அமெரிக்கால இருந்தா வெல்கம் சொல்லலாம் ......


புதிய வீடியோ