உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அறக்கட்டளை பொறுப்பில் இருந்து விலகினார் இளவரசர் ஹாரி

அறக்கட்டளை பொறுப்பில் இருந்து விலகினார் இளவரசர் ஹாரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: தாயார் டயானாவை கவுரவிக்கும் விதமாக, எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடங்கப்பட்ட அறக்கட்டளையின் பொறுப்பில் இருந்து இளவரசர் ஹாரி விலகியது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரிட்டன் இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை 2018ல் திருமணம் செய்து கொண்டார். வெள்ளையர் அல்லாத பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், மேகனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பியதால், அரச குடும்பத்தில் இருந்து விலகினார். தற்போது, தன்னுடைய தாயாரும், இளவரசியுமான டயானாவை கவுரவிக்கும் விதமாக, தொடங்கப்பட்ட அறக்கட்டளையின் இணை நிறுவனர் பொறுப்பில் இருந்தும் அவர் விலகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2006ம் ஆண்டு சென்டேபல் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் மூலம், எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், பெண்களுக்கு உதவி செய்து வந்தார். அறக்கட்டளையின் தலைமை பொறுப்பில் இருந்து ஜிம்பாப்வேவைச் சேர்ந்த ஷோபி சந்தவுகா பதவி விலக மறுத்ததால் எழுந்த பிரச்னை காரணமாக, இணை நிறுவனரான லெசோதோ இளவரசர் சீசோவுடன் இணைந்து ஹாரியும் அறக்கட்டளை பொறுப்பில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 20 ஆண்டுகளுக்கு மேலாக இளவரசர் ஹாரி இந்த அறக்கட்டளையின் மூலம் எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Appa V
மார் 27, 2025 00:42

பில் கேட்ஸ் அம்பானி அதானி போன்ற ஒரு சில தொழிலதிபர்கள் மட்டுமே அறக்கட்டளைகள் மூலம் போலியோ, கேன்சர் போன்ற நோய்களுக்கு செலவு செய்கிறார்கள். அரசாங்கம் எல்லா மருந்து மாத்திரைகளுக்கும் வரி வசூலிப்பது மனிதாபிமானம் இல்லாத செயல் ..


mindum vasantham
மார் 26, 2025 21:46

இவர் செய்த தப்பு 5% மட்டும். கருப்பு இனம் உள்ள பெண்ணை கட்டினார் , இந வெறி ஆட்டி படைக்கிறது


சமீபத்திய செய்தி