உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதா? மேற்கு நாடுகள் மீது அதிபர் புடின் பாய்ச்சல்

ரஷ்யாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதா? மேற்கு நாடுகள் மீது அதிபர் புடின் பாய்ச்சல்

மாஸ்கோ: மேற்கு நாடுகள் ரஷ்யாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கின்றன என அந்நாட்டு அதிபர் புடின் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.மின்ஸ்கில் நடந்த யூரேசிய பொருளாதார ஒன்றிய (EAEU) உச்சிமாநாட்டில், ரஷ்ய அதிபர் புடின் பேசியதாவது: ஐ.எஸ்., ரஷ்யாவுக்கு எதிராக செயல்படும் வரை யாரும் அதன் மீது கவனம் செலுத்த வில்லை. மாஸ்கோவில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இன்னும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.யாரும் இதில் கவனம் செலுத்த விரும்புவதில்லை. ரஷ்யாவிற்கு எதிராக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்று விரும்பினர். ரஷ்யாவில் மேற்கு நாடுகள் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கின்றன. மேற்கு நாடுகள் ரஷ்யாவுக்கு தொடர்ந்து சதி செய்து வருகிறது.சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு நாங்கள் எவ்வாறு வந்துள்ளோம் என்பது பற்றி யாரும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. மாஸ்கோவுடனான புவிசார் அரசியல் போராட்டத்தில் மேற்கு நாடுகள் பயங்கரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. இவ்வாறு அதிபர் புடின் மேற்கு நாடுகளை கடுமையாக சாடியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mecca Shivan
ஜூன் 29, 2025 06:30

ஐரோப்பா இப்போது இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது .. ஆனால் ரஷ்யாவும் அவர்களைத்தான் ஆதரிக்கிறது .. புடின் மற்றும் சர்வாதிகாரி க்ஸி நிச்சயமாக தீவிரவாதிகளால்தான் அகற்றப்படுவார்கள்


Nada Rajan
ஜூன் 28, 2025 22:43

ரஷ்யாவில் சர்வதிகார ஆட்சி நடக்கிறது.. அது பற்றி வாய் திறக்க வில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை