உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புடின் முழு பைத்தியமாகி விட்டார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம்

புடின் முழு பைத்தியமாகி விட்டார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புடின், முற்றிலும் பைத்தியமாகி விட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம் அடைந்துள்ளார்.ஐரோப்பிய நாடான உக்ரைன் - -ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளை கடந்து போர் நீடிக்கிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப்பதவியேற்றதும் போரை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது தற்காலிக போர் நிறுத்தம், பிடிபட்ட கைதிகளை விடுவிப்பது என சமரசம் ஏற்பட்டாலும் நிரந்தர போர் நிறுத்தத்துக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட நகரங்கள் மீது, 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன் ஏவியது. இதையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ட்ரோன்கள், ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். நேற்று நியூஜெர்ஸியில் பேட்டியளித்த அவர், “நிறைய பேரை புடின் கொல்கிறார். அவருக்கு என்னவாயிற்று என தெரியவில்லை,” என்றார்.இந்நிலையில், நேற்று தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், 'புடினுக்கு முற்றிலுமாக பைத்தியம் பிடித்துவிட்டது' என ஆவேசமடைந்துள்ளார்.அதில், டிரம்ப் கூறியுள்ளதாவது: ரஷ்ய அதிபர் புடினுடன் எனக்கு நல்ல உறவு உண்டு. ஆனால் தேவையில்லாமல் ஏராளமான மக்களை அவர் கொன்று குவிக்கிறார். எந்தவித காரணமும் இன்றி, உக்ரைன் நகரங்களில் ஏவுகணைகளை வீசி தாக்குகிறார்.அவருக்கு முழு பைத்தியம் பிடித்துவிட்டது. புடின், உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற நினைத்தால், அதுரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அதே நேரத்தில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தன் பேச்சு மற்றும் செயல்கள் வாயிலாக, அவரது நாட்டுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாமே பிரச்னைகளையே ஏற்படுத்துகிறது. எனக்கு அது பிடிக்கவில்லை;அதை அவர் நிறுத்துவது நல்லது.மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் அதிபராக இருந்திருந்தால், இந்த போர் ஏற்பட்டிருக்காது. இது ஜெலன்ஸ்கி, புடின், பைடன் ஆகியோரின் போர்; டிரம்பின் போர் கிடையாது. மிக மோசமான தாக்குதல்களை நிறுத்துவதற்கான உதவிகளை மட்டுமே நான் மேற்கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, போர் நிறுத்தத்துக்கு புடின் மறுப்பதால், ரஷ்யா மீது, இந்த மாதம் ஏராளமான தடைகளை ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்துள்ளன. ஆனால், ரஷ்யா மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக அடிக்கடி கூறும் டிரம்ப், இதுவரை அதுபோன்று எதுவும் செய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Narayanan
மே 28, 2025 11:59

டிரம்ப் நிலைக் கண்ணாடி முன் நின்று பேசுகிறார் . தினம் ஒரு அறிவிப்பின் மூலம் தன்னை ஊடங்களில் நிறுத்திக்கொண்டு வருகிறார் . தினமும் அடுத்தவர்களை பயப்படுத்திவருகிறார்


venugopal s
மே 27, 2025 20:07

கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள், இங்கு இந்தியாவில் மத்திய அரசில் இதுபோல் நிறையவே உள்ளன, நாங்கள் பொறுத்துக் கொள்ள வில்லையா?


Pmnr Pmnr
மே 27, 2025 15:59

டிரம்ப் மற்றும் புதின் இருவருக்கும் பைத்தியம் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்


srinivasan varadharajan
மே 27, 2025 13:35

இன்னொருவரை பைத்தியம் என்பது வேடிக்கை.


Balamurugan
மே 27, 2025 12:58

உக்ரைன் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடு ஆனாலும் ரஷ்யாவின் அங்கமாகவே பார்க்கப்படுகிறது. நேட்டோவில் சேரும் முடிவை எடுத்ததே தவறானதாக பார்க்கப்படுகிறது. அமரிக்கா யாருக்கும் உண்மையான நாடாக இருந்ததில்லை.


Ramesh Sargam
மே 27, 2025 11:43

தேவையில்லாமல் ஏராளமான மக்களை அவர் கொன்று குவிக்கிறார். எந்தவித காரணமும் இன்றி, உக்ரைன் நகரங்களில் ஏவுகணைகளை வீசி தாக்குகிறார், என்று புடின் மீது குற்றம் சுமத்தும் இவர், தெற்கு கரோலினாவில் துப்பாக்கிச்சூடு 11 பேர் காயம் அமெரிக்காவில் அதிர்ச்சி பூங்காவில் துப்பாக்கிச் சூடு இருவர் பலி: 8 பேர் படுகாயம் இதுபோன்ற தன்னுடைய நாட்டில் நடக்கும் அவலங்களுக்கு என்ன பதில் சொல்வார்.


Ramesh Sargam
மே 27, 2025 11:38

பாம்பின் கால் பாம்பறியும் என்று சொல்வார்கள். அதேபோல ஒரு பயித்தைப்பற்றி மற்றொரு பயித்தியம் நன்றாக அறிந்துகொண்டிருக்கிறது.


ஆரூர் ரங்
மே 27, 2025 11:33

புடினுக்கு முழு உக்ரைனையும் பிடிச்சு சுரண்ட ஆசை. ஆனா அதே சுரங்கங்களில் சுரண்ட அட்வான்சாக செலவழித்த டிரம்ப் வட போச்சேன்னு அலறுவது நியாயமே. ஆக இரண்டு வல்லரசுகளும் அடிச்சுக்கிட்டிருக்குறது நாலாவது பெரிய பொருளாதார நாட்டுக்கு நல்வாய்ப்பு.


JAGADEESANRAJAMANI
மே 27, 2025 11:29

புடின் பைத்தியம் கிடையாது.நினைச்சு நினைச்சு மாத்திபேசறவங்க தான் பைத்தியம்.


அப்புசாமி
மே 27, 2025 10:58

நான் அதிபரானால் 24 மணி நேரத்தில் போரை நிறுத்துவேன். நான் பிரதமரானால் 150 லட்சம் கோடியை நுய்றே நாளில் கொண்டாருவேன். இதெல்காம் ஹை கெவல் உதார்கள். நாமதான் லைட்டா எடுத்துக்க பழகிக்கணும்.


ஜெய்ஹிந்த்புரம்
மே 28, 2025 20:38

விசுவக்குரு போரை போன் போட்டு நிப்பாட்டிடுவாருன்னு சொல்லி நோபல் பரிசுக்கு அப்ளிகேஷன் போட்ட கூத்தை நாம பாத்துருக்கோம்.