உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகப்போராக மாற்ற முயற்சி; மேற்கு நாடுகள் மீது ரஷ்யா அதிபர் குற்றச்சாட்டு

உலகப்போராக மாற்ற முயற்சி; மேற்கு நாடுகள் மீது ரஷ்யா அதிபர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: 'இரு நாடுகளுக்கு இடையிலான போரை உலகப்போராக மேற்கத்திய நாடுகள் மாற்ற முயற்சி செய்கிறது' என ரஷ்யா அதிபர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.ரஷ்யா - உக்ரைன் போர், 1,000 நாட்களை கடந்தும் தொடர்கிறது. உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் மட்டுமின்றி, ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கி உள்ளது. போரில் ரஷ்யாவின் கை ஓங்குவதை தடுக்க, அந்த நாட்டுக்கு எதிராக நீண்ட துாரம் பயணித்து தாக்கும் திறன் உடைய ஏவுகணையை உக்ரைன் பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி உக்ரைன் ராணுவமும், அமெரிக்கா மீது நீண்ட தொலைவு செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதற்கு பதிலடி தரும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா முதல்முறையாக பயன்படுத்தி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oacpfilq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் ரஷ்ய ஊடகங்களுக்கு, அதிபர் புடின் அளித்த பேட்டி: ரஷ்யா மீது தாக்குதல் நடத்த தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான போரை உலகப்போராக மேற்கத்திய நாடுகள் மாற்ற முயற்சி செய்கிறது. ரஷ்யா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை வழங்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும்.

தக்க பதிலடி

ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகளின் ராணுவ வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த ரஷ்யாவிற்கு உரிமை உண்டு. சர்வதேச பாதுகாப்பு அமைப்பை அழிப்பது ரஷ்யா அல்ல, அமெரிக்காதான் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்த்தோம். உக்ரைனை நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ரஷ்ய நிலப்பரப்பை தாக்க அனுமதிப்பதன் மூலம் போர் தீவிரம் அடைந்து வருகிறது. நாங்களும் தக்க பதிலடி கொடுப்போம். இவ்வாறு புடின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
நவ 23, 2024 03:56

உலகப் போராக மாறியாச்டு. வட கொரியா சிப்பாய்கள் ரஷ்யாவுக்காக போராடறாங்க. சாவுறாங்க. இரானிய ட்ரோன்கள் ரஷ்யாவால் உக்ரனை அழிக்க பயன் படுத்தப் படுகின்றன. அமெரிக்க, ஐரோப்பா போர் தளவாடங்கள் உக்ரைனால் ரஷ்யாவைத் தாக்க உபயோகப் படுத்தப் படுகின்றன. ரஷிய குறைந்த விலை ஆயில் வாங்கப் பட்டு போருக்கான செலவுக்கு பணம் போய்சேர்கிறது. அதே ஆயில்.பெட்ரோல் மாறி ஐரோப்பாவுக்கு விற்கப் படுகிறது. உலகத்தின் முக்கிய நாடுகள் மறைமுகமாக போரில் ஈடுபட்டுள்ளன. உலகப் போர்தான் இது.


sankaranarayanan
நவ 22, 2024 21:06

விமானத்தின் படியே ஏறமுடியாமல் இருமுறை தடுக்கி விழுந்த இந்த கிழ ஜனாதிபதி ஒய்வு எடுக்கும் காலத்தில் எதற்காக இந்த பழியை சுமக்க வேண்டும் மனித குலத்தையே அழித்துவிட்டுத்தான் ஒய்வு எடுப்பாரா இது இப்போது இந்த வயதில் இவருக்கு வேண்டுமா சாவும் போதாவது சங்கரா சங்கரா என்று சொன்னா வாவது கொஞ்சம் புண்ணியம் கிடைக்கும் மனிதகுலமே வாழ வேண்டுமானல் இந்த மூன்றாம் உலக போரை நிகழ விடாமல் உடனே தடுக்க வேண்டும்.


Ramesh Sargam
நவ 22, 2024 12:20

உலகப்போராக மாற்ற முயல்வது அமெரிக்காதான். இந்த அமெரிக்கர்களுக்கு உலகில் எங்காவது தினம் தினம் வருடம் முழுக்க போர் நடக்கவேண்டும். அதில் சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைத்து போரை தொடரவைக்கவேண்டும். தங்கள் நாட்டு ஆயுத தயாரிப்புக்களை விற்று பணக்காரர்களாக ஆகவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை