உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்தம் வருமா? துருக்கியில் இன்று உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை!

போர் நிறுத்தம் வருமா? துருக்கியில் இன்று உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை!

கீவ்: போர் நிறுத்தம் ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று (மே 15) உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்துகிறது.ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், அதை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இன்று (மே 15) நேரடி பேச்சுவார்த்தை நடத்தலாம் என உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்து இருந்தார். இதையடுத்து, ''மே 15ம் தேதி வியாழக்கிழமை துருக்கியில் புடினுக்காக நான் காத்திருப்பேன். தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவோம்'' என புடின் அழைப்பை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டார். போர் நிறுத்தம் ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று (மே 15) உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்துகிறது.தற்போது துருக்கியில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையை புடின் புறக்கணிக்கிறார். அவர் தனது பிரதிநிதிகளை நேரடி பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக, ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது குறித்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவிலிருந்து யார் வருவார்கள் என்பதைப் பார்க்க நான் காத்திருக்கிறேன், பின்னர் உக்ரைன் எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்வேன். துருக்கியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருவதாகவும் நான் கேள்விப்பட்டேன். ரஷ்யா போரையும், கொலைகளையும் நீட்டித்து வருகிறது. போர் நிறுத்தம் கொண்டு வர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு தலைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அமைதி மற்றும் ராஜதந்திரத்திற்கு உதவும் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
மே 15, 2025 14:41

இதனிடையே துருக்கிக்கு 30 கோடி டாலர் மதிப்பிலான ஏவுகணைகளை விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. நிஜ நண்பன் யார்? நிஜமான பயனாளி யார்?


ramesh
மே 15, 2025 10:41

தீவிரவாதிகளுக்கு உதவும் துருக்கி . நல்ல தேர்வு .சரியான இடத்தி பேச்சுவாத்தை .உருப்படும் ?


Naga Subramanian
மே 15, 2025 09:50

துருக்கி ஒரு நம்பகத்தன்மையற்ற தேசம். அனைவரும் அறிந்ததே


Amar Akbar Antony
மே 15, 2025 08:59

துருக்கி சீனா பாக் பங்கி நம்பமுடியாத நாடுகள். துரோகிகள்.


சா கணேசன்
மே 15, 2025 08:43

Russia and Ukraine has peace talks at Turkeye.RammanoharLokia said 70 yrs ago condeming the Nheru neutrality.India has no friends and Pak. has np enimies.Still holds good


சமீபத்திய செய்தி