உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் புடின்: 4 ஆண்டுகள் கழித்து டிச.4-5ல் இந்தியாவில் சுற்றுப்பயணம்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் புடின்: 4 ஆண்டுகள் கழித்து டிச.4-5ல் இந்தியாவில் சுற்றுப்பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் புடின் டிசம்பர் 4-5 தேதிகளில் இந்தியா வருகிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் டில்லி வருவதாக வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது; ரஷ்ய அதிபர் புடினின் அரசு முறைப் பயணம், இந்தியா மற்றும் ரஷ்யாவின் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை மேம்படுத்தவும், வலுப்படுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையை உறுதிப்படுத்தவும், உலகளாவிய பிரச்னைகள் குறித்து பரஸ்பரம் கருத்துகளை பரிமாறி கொள்ள வாய்ப்பை வழங்கும். இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.2022ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் தற்போது தான் அதிபர் புடின் இந்தியா வருகிறார். மேலும், இந்த பயணத்தின் போது உச்சி மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. கடைசியாக 2021ம் ஆண்டு இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புடின் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை