உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ராம்தேவுக்கு நேபாளத்தில் தாராள சலுகை: மாஜி பிரதமர் மீது குற்றப்பத்திரிகை

ராம்தேவுக்கு நேபாளத்தில் தாராள சலுகை: மாஜி பிரதமர் மீது குற்றப்பத்திரிகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு: நேபாளத்தில் பதஞ்சலி நிறுவனத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, அதிக நிலம் வழங்கிய குற்றச்சாட்டில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள் மீது, அந்நாட்டு லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், 8 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.நம் அண்டை நாடான நேபாளத்தில், ஷர்மா ஒலி பிரதமராக உள்ளார். இங்கு 2009 -- 2011 வரையிலான காலக்கட்டத்தில் மாதவ் குமார் நேபாள், 72, பிரதமராக பதவி வகித்தார். அப்போது யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், மூலிகை உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை கட்ட காவ்ரே மாவட்டத்தில் நிலம் வழங்கக் கோரியது.இதற்காக அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, அதிக நிலம் மிகக் குறைந்த விலைக்கு பதஞ்சலி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நிலங்கள் பின்னர் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக நேபாள முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள் மீது வழக்கு பதியப்பட்டது.இந்த வழக்கை நேபாள லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்தது. சமீபத்தில் அவர்கள் காத்மாண்டு சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் மாதவ் குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், அவருக்கு 8 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.இந்த வழக்கில் மாதவ் குமார் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 17 ஆண்டு சிறை தண்டனையும் கிடைக்கும்.இந்த குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் மாதவ் குமார் மற்றும் ராம்தேவ் மறுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை