உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபராக பணியாற்றவும் தயார்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பளீச்

அதிபராக பணியாற்றவும் தயார்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பளீச்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சோகம் நடந்தால் அதிபராக பணியாற்ற தயார் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ். இவர் அமெரிக்க துணை அதிபராக பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து ஜே.டி.வான்ஸ் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cgeg6939&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். மீதமுள்ள பதவிக்காலத்தை அவரால் தொடர முடியும். அமெரிக்க மக்களுக்கு சிறந்த காரியங்களை செய்வார் என நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவர் நிறைய நல்ல விஷயங்களை செய்து உள்ளார். கடவுள் அனுமதிக்கட்டும். ஒரு பயங்கரமான சோகம் நடந்தால், அதிபராக பணியாற்ற தயார் . கடந்த 200 நாட்களில் நான் பெற்றதை விட சிறந்த வேலைப் பயிற்சியை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உடல்நிலை குறித்த ஊகங்களுக்கு மத்தியில், துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கருத்துக்கள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ஜே.டி.வான்ஸ்?

* அமெரிக்கா துணை அதிபராக ஜே.டி.வான்ஸ், 41, பதவி ஏற்றதை தொடர்ந்து அவரது மனைவி உஷா வான்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி ஆனார். * உஷா வான்ஸ், பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.* 2014ம் ஆண்டில் ஜே.டி.வான்ஸ்-ஐ கரம் பிடித்த உஷாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். * துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவின் மருமகன் என்பதால் இந்தியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

sekar ng
செப் 03, 2025 07:25

கொரியா, வியட்னாம், இராக், சிரியா, ஈரான்,ஆப்கான், உக்ரன் என உலக அமைதி யை ஆயுதம் வழங்கி, ஏன் இந்தியா பாக்கிஸ்தானுக்கும் அமெரிக்கதான் காரணம். உலக அமைதியை சீர்க்கெடுப்பவனுக்கு நோபல் பரிசாம். உலக தலைவராம். இதை ஸ்டாலினும், ராகுலும் ஆசீம் முனீரும் தான் புகால்வார்கள்


Prem
ஆக 29, 2025 22:14

ஒரு மண்ணும் வராது... உஷா என்றால் அள்ளி வாரி இந்தியாவிற்கு ?


தஞ்சை மன்னர்
ஆக 29, 2025 13:55

முதலில் டிரம்ப் கூறியபடி உக்ரைன் நேட்டோ யில் சேரக்கூட என்ற கருத்து என்ன ஆச்சி அதற்க்கு முதலில் பதில் சொல்லவேண்டும் பிறகு ஒரு நாட்டின் அதிபர் வரணுமா வரக்கூடாத என்பதை அந்த நாடு முடிவு எடுக்கும் இப்படி ஐரோப்ப நாட்டில் ஒன்றின் அதிபரை வேறு ஒரு நாடு சொன்னால் ஒத்துக்கொள்ளும் இந்த ஒன்றியம் என்ன அடாவடி தனம் ஆசியாவின் மீது இவர்களின் ஆதிக்கத்திற்கு முற்று புள்ளி வைக்கவேண்டும் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு மற்றும் அனைத்து பொருள்களையும் அனைத்து நாடுகளும் உடனே நிறுத்தினால் அடங்கி விடும் இந்த வெள்ளை தோல்களின் ஆட்டம்


Santhakumar Srinivasalu
ஆக 29, 2025 13:40

பிடித்த சனியன் ஒழிந்தது என்று உலகத்திற்கு நிம்மதி


M. PALANIAPPAN, KERALA
ஆக 29, 2025 11:46

இந்தியாவை சீண்டிய டிரம்புக்கு என்ன ஆச்சு? தன் வினை தன்னை சுடும்


KavikumarRam
ஆக 29, 2025 11:40

இந்தியாவின் மருமகனா??? எவண்டா சொன்னது. அமெரிக்காவில் அரசியலில் உயர்பதவிகளில் இருக்கும் இந்திய வம்சாவளியிரனாலோ அல்லது அமெரிக்க குடியுரிமை பெற்ற உலகை கோலோச்சும் அமெரிக்க கம்பனிகளில் உச்சபதவிகளில் இருக்கும் இந்தியர்களாலோ இந்தியாவுக்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் பாரதத்துக்காக ஒரு துரும்பை கூட அசைக்க மாட்டார்கள். அதனால் இந்த அமெரிக்காவின் இந்திய மருமகன் போன்ற வெட்டி செண்டிமண்ட்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். இப்படித்தான் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கை கொண்டாடினீர்கள். அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனம் இருந்ததா??? முந்தைய அமெரில்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், மைக்ரோசாஃப் சிஇஒ, கூகுள் சிஇஒ, அடோப் சிஇஒ…பாரதத்துக்கு என்ன பிரயோஜனம், இதே பதவிகளில் சைனாக்காரன் இருந்திருந்தால் இன்னேரம் பாதி அமெரிக்காவை கைப்பற்றியிருப்பான்.


sekar ng
செப் 03, 2025 07:37

உங்களுக்குள் திராவிட மாயை புகுந்து விட்டது


Balamurugan
ஆக 29, 2025 10:57

அமெரிக்காவின் குடியரசு கட்சிக்குள்ளேயே டிரம்புக்கு எதிராக பிரச்னை கிளம்பியுள்ளது என்பதையே அமரிக்க துணை ஜனாதிபதியின் பேச்சு உணர்த்துகிறது. ட்ரம்ப் தேவை இல்லாமல் பிரச்சனையை பெரிது படுத்தி விட்டார்.


K.Ravi Chandran, Pudukkottai
ஆக 29, 2025 10:32

பக்கத்திலேயே உட்கார்ந்து துண்டைப் போட்டு காத்திருப்பார் போல. இன்னும் பல்லாண்டு காலம் டிரம்பர் வாழ வேண்டும். அவரையும் அவரது குடியரசு கட்சியையும் அமெரிக்க மக்கள் ஓட, ஓட விரட்டுவதை இந்தியர்களாகிய நாங்கள் கண் குளிர காண வேண்டும்.


அன்பு
ஆக 29, 2025 19:54

தின்னை எப்போ காலியாகும் என்று காத்திருக்கிறார் போல. B


Anand
ஆக 29, 2025 10:28

டிரம்பிற்கு என்ன நடக்கும் என இவருக்கு தெரிந்துவிட்டது.


GANDHI K
ஆக 29, 2025 10:19

என்ன ஆச்சு


புதிய வீடியோ