இந்தியாவுடனான உறவு தனித்துவமானது: நெதன்யாகு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
ஜெருசலேம்: “இந்தியா உடனான இஸ்ரேலின் உறவு தனித்துவமானது,'' என, அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம் தெரிவித்தார். மேற்காசிய நாடான இஸ்ரேலின் மேற்கு கரையில் நேற்று நடந்த ஒரு மாநாட்டில், அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு பேசியதாவது: இந்தியா போன்ற வல்லரசு நாடுடன் இஸ்ரேல் கொண்டுள்ள உறவு தனித்துவமானது. உலகின் பெரும்பாலான நாடுகள், நம்மை அங்கீகரிக்க மறுக்கின்றன. ஆனால், இந்தியா நம் மீது வைத்துள்ள அன்பு என்பது அளவு கடந்தது; இந்தியர்கள் நம் நாட்டை அதிகம் நேசிக்கின்றனர். இஸ்ரேலுக்கு வரும் போது இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே போல நான் அங்கு சென்ற போதும் எனக்கும் வரவேற்பு நன்றாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.