உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சுதந்திர தேவி சிலையை திரும்ப ஒப்படையுங்க; பிரான்ஸ் பார்லியில் எழுந்தது கோரிக்கை

சுதந்திர தேவி சிலையை திரும்ப ஒப்படையுங்க; பிரான்ஸ் பார்லியில் எழுந்தது கோரிக்கை

பாரிஸ்: இரு நாடுகளுக்கு இடையிலான நட்பின் அடையாளமாக பிரான்ஸ் வழங்கிய சுதந்திர தேவி சிலையை, அமெரிக்கா திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பிரான்ஸ் நாட்டு பார்லிமென்டில் எம்.பி., ரபேல் குளக்ஸ்மேன் வலியுறுத்தினார்.நியூயார்க்கில் அமைந்துள்ள, 126 ஆண்டு கால பழமைவாய்ந்த சுதந்திர தேவி சிலை உலகப் புகழ் பெற்றதாகும். பிரான்ஸ் நாட்டின் சார்பில் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட இந்த சிலைக்குள், 354 படிக்கட்டுகள் இருந்தன. சமீபத்தில் சீரமைப்பு பணி நடந்தது. இவை, 393 படிக்கட்டுகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளன.அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. எல்லா பிரச்னைகளிலும் அதிபர் டிரம்ப் ஐரோப்பிய நாடுகளை குறை கூறுகிறார். இது ஐரோப்பிய நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.இந்நிலையில் பிரான்ஸ் பார்லிமென்டில் எம்.பி., ரபேல் குளக்ஸ்மேன் கூறியதாவது: அமெரிக்காவின் செயல்பாட்டினை வன்மையாக கண்டிக்கிறேன். அமெரிக்காவின் நடவடிக்கை ஜனநாயகம், சுதந்திரத்திற்கும் எதிராக இருக்கிறது. அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறார்கள். இதனால் பிரான்ஸ் பரிசாக கொடுத்த சுதந்திர தேவி சிலையை அவர்கள் வைத்திருக்க தகுதியில்லை. இதனால் நட்பின் அடையாளமாக உள்ள சுதந்திர தேவி சிலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்கா பதில்

இதற்கு, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை பிரான்சிடம் ஒப்படைப்பதாக இல்லை. 2ம் உலகப் போரில் நாஜி ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்ஸ், அமெரிக்க படையினரின் முயற்சியால் தான் விடுவிக்கப்பட்டது. அன்று அமெரிக்காவின் உதவி இல்லையெனில் பிரான்சில் இப்போது ஜெர்மனி மொழிதான் பேசி கொண்டிருப்பார்கள். எனவே அமெரிக்காவுக்கு பிரான்ஸ் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிலடி கொடுத்துள்ளார். வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரின் பதில், பிரான்ஸ் அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anand
மார் 20, 2025 19:16

சரி சரி உங்களுக்குள் நடக்கும் சண்டையில் எங்களிடம் கொள்ளையடித்ததை (பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகள்) திரும்ப ஒப்படைக்க மறந்து விடாதீர்கள்.... ஆமாம்.


Indhuindian
மார் 20, 2025 17:12

வெற்றி பெற வாழ்த்துக்கள். அவர்கள் பரிசாக கொடுத்ததை திரும்பி வாங்கிட்டா நம்மகிட்டேந்து கொள்ளை அடிச்சிட்டு போன பல ஆயிரம் கோடி பொருட்களை அந்த அந்த அரசுகள் முக்கியமாக ஆங்கிலேய அரசு திருப்பி கொண்டு வர மோடி அரசு எல்லா முயற்சிகளையும் செய்யவேண்டும்


Oru Indiyan
மார் 20, 2025 16:19

அப்படியே அமெரிக்கா ஒப்பு கொண்டாலும் , அம்மாம் பெரிய சிலையை எப்புடி கொண்டு வருவாகாக..


தத்வமசி
மார் 20, 2025 14:35

இவனுங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஆசியாவில் உள்ள நாடுகளை தங்களின் கட்டுப்பாட்டில் ஒற்றுமையாக வைத்திருந்து, அவரவர்களால் எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுரண்டினார்கள். இப்போது இவர்களுக்குள் சண்டை. சுப்பர் அப்பு.


Ganapathy
மார் 20, 2025 13:59

அப்ப பிரான்ஸ் இங்க கொள்ளையடித்த செல்வங்களை நாமும் கேட்பதில் தவறில்லை.


Ramaswamy Jayaraman
மார் 20, 2025 11:52

கொடுத்த பரிசினை திரும்ப கேட்பது நாகரீகம் அல்ல.


TRE
மார் 20, 2025 11:24

இப்படி ஒண்ணு ஒண்ணா திருப்பிக்கொடுத்தா அமெரிக்காவுக்கு எதுவும் மிஞ்சாதே


ஆரூர் ரங்
மார் 20, 2025 11:11

இதே போல இந்தியா காலனி ஆதிக்கத்திலிருந்த நேரத்தில் இங்கிருந்து சுரண்டி எடுத்துச்சென்ற வளங்களை ஐரோப்பிய நாடுகள் திருப்பிக் கொடுக்கவேண்டும் எனக் கோரினால் அவையனைத்தும் திவாலாகிவிடும். ஆப்பிரிக்க அடிமைகளை சுரண்டியதால்தான் அமெரிக்கா வல்லரசானது என்பதை மறந்துவிடக்கூடாது. மற்ற நாடுகளை போரிட்டு அடிமைப்படுத்தி சுரண்டாத ஒரே பெரிய நாடு இந்தியாதான்.


முக்கிய வீடியோ