காலே டெஸ்ட்: இந்திய அணி 371 ரன் முன்னிலை; ரிஷப் பன்ட் சாதனை
காலே: காலே டெஸ்டில் இந்திய அணி , 2வது இன்னிங்சில் 193 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதன் வாயிலாக 371 ரன் முன்னிலை பெற்றுள்ளது.இலங்கை சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், காலே சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 462 ரன் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 178 ரன் முன்னிலை பெற்றது. 4 ம் நாளான இன்று இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி துவக்கியது. துவக்க வீரர் யஷாஸ்வி ஜெ யிஸ்வால் ரன் எடுக்காமல் அவுட் ஆனார்.ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் இணைந்து மெதுவாக ரன் எடுத்தனர். 2வது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்தது.ராகுல் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் சுப்மன் கில் 8 ரன்னுக்கும், தேவ்தத் படிக்கல் 44 ரன்னில் அவுட் ஆனார்கள்.ரிஷப் பன்ட் அதிகபட்சமாக 66 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.துரவ் ஜூரன்(7), ரவீந்திர ஜடேஜா (9), மனவ் சுதர்(9), குல்தீப் யாதவ்(5), பிரஷித் கிருஷ்ணா(2) ரன்னில் அவுட் ஆக இந்திய அணியின் 2வது இன்னிங்ஸ் 193 ரன்னுக்கு முடிவுக்கு வந்தது. இதன் வாயிலாக இந்திய அணி 371 ரன் முன்னிலை பெற்றுள்ளது.இலங்கை அணி வீரர் அஸிதா பெர்ணாண்டோ 4, பிரபாத் ஜெயசூர்யா 3 லஹிரு குமாரா 2 விக்கெட் வீழ்த்தினர்.பன்ட் சாதனை
இந்நிலையில், இன்றைய போட்டியில் ரிஷப் பன்ட் டெஸ்ட் போட்டியில் 100 சிக்சர் அடித்து சாதனை படைத்தார். 51வது டெஸ்ட் போட்டியில் பன்ட் இந்த சாதனை படைத்தார். இந்தப் போட்டி துவங்கும் வரை, ரிஷப் பன்ட் 97 சிக்சர் அடித்து இருந்தார்.சாதனை பட்டியல்இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் - 138 சிக்சர்.நியூசிலாந்து பிரெண்டன் மெக்கல்லம் - 107 சிக்சர்.இந்திய அணி வீரர் ரிஷப் பன்ட் 100 சிக்சர்.ஆஸி., வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் - 100 சிக்சர்.விரேந்திர சேவக், ரோகித் சர்மா தலா 91 சிக்சர்கள் அடித்து உள்ளனர்.