வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Rip
இந்த சின்ன குடிசையில் 226 பேரா
Rip
ஆழ்ந்த இரங்கல்...
சாண்டோ டொமிங்கோ: டொமினிக் குடியரசில் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 66 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.டொமினிக் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் இரவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் கூரை நேற்றிரவு எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி 66 பேர் உயிரிழந்தனர். மேலும் 160க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் பலர் உயிரோடு சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. விபத்திற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, முன்னாள் பேஸ்பால் அணி வீரர் ஆக்டேவியோ டோட்டல் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த மற்றவர்களை அடையாளம் காணும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது.
Rip
இந்த சின்ன குடிசையில் 226 பேரா
Rip
ஆழ்ந்த இரங்கல்...