வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீங்கள் அமெரிக்க சார்பை நிறுத்தினாலே போர் நிறுத்தம் ஏற்பட்டு விடும்
கீவ்: காசா போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.இஸ்ரேல்- ஹமாஸ் இடையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நான் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது, இஸ்ரேல்- காசா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக வாழ்த்து தெரிவித்தேன். ஒரு பிராந்தியத்தில் போரை நிறுத்த முடியும் என்றால், உக்ரைன்- ரஷ்யா போர் உள்ளிட்ட மற்று போர்களை உறுதியாக நிறுத்த முடியும்.நமது எரிசக்தி அமைப்பின் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் குறித்து டிரம்பிடம் தெரிவித்தேன். மேலும் எங்களுக்கு ஆதரவளிக்க அவர் தயாராக இருப்பதை நான் பாராட்டுகிறேன். நமது வான் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து நாங்கள் விவாதித்தோம்.உண்மையான ராஜதந்திரத்தில் ஈடுபட ரஷ்ய தரப்பில் தயார்நிலை இருக்க வேண்டும். இதை வலிமை மூலம் அடைய முடியும். அதிபர் டிரம்புக்கு நன்றி. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
நீங்கள் அமெரிக்க சார்பை நிறுத்தினாலே போர் நிறுத்தம் ஏற்பட்டு விடும்