உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இது உலகப்போருக்கு வழிவகுக்கும்; அமெரிக்காவை எச்சரிக்கிறது ரஷ்யா!

இது உலகப்போருக்கு வழிவகுக்கும்; அமெரிக்காவை எச்சரிக்கிறது ரஷ்யா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: 'நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்திருப்பது உலகப்போருக்கு வழி வகுக்கும்' என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. பதில் தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற நவீன ரக ஆயுதங்களை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mbrunka7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன் ஒரு பகுதியாக, தொலைதுார இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது, உலகப்போருக்கு வழி வகுக்கும். ரஷ்யாவிற்கு எதிரான விரோத போக்கில் அமெரிக்கா செயல்படுகிறது. ஏவுகணைகளுக்கு அனுமதி அளித்தது அமெரிக்காவின் பொறுப்பற்ற, ஆபத்தான முடிவு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ramesh Sargam
நவ 19, 2024 22:16

ஒருபக்கம் இந்தியா போன்ற நாடுகள் இருநாடுகளுக்கும் இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர பிரம்மபிரயத்தனம் செய்கிறது. ஆனால் இந்த அமெரிக்கா இருக்கிறது பாருங்கள் அதற்கு எதிராக செயல்படுகிறது. இந்த அமெரிக்கா எப்படி என்றால், ஊரு ரெண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதுபோல இந்த அமேரிக்கா கூத்தாடிக்கு உலகில் எங்கு போர் நடந்தாலும் கொண்டாட்டம்.


அப்பாவி
நவ 19, 2024 19:59

ட்ரம்பு தான் வர்ராரு. விடியல்தான் தர்ராரு. ஜனவரி 20 முதல்.


Joy Kizha
நவ 19, 2024 19:54

ரக்ஷ்யா செய்வது சரியா? சுற்றியுள்ள நாடுகளையெல்லாம் பினை கைதிகளாக வைத்து சோவியத்து என்று பெயரில் 100 ஆண்டு காலம் அனுபவித்து வந்தது அது சரியா? இதனால்தான் உக்ரேய்ன் ஐராப்பாவிடம் தஞ்சம் புகுந்தது. இதில் என்ன தவறு. இப்போது ரக்ஷ்யா கதறுகிறது. எதனால், பயம். யாருடா இந்த தர்மத்தை கற்று கொடுத்தது உங்களுக்கு? இனிமேல்ர நான் ஒன்றும் செய்ய மாட்டேன நீ தைறியமாக ஆண்டு கோள்ளலாம் என்று சொல்ல வேண்டியதுதானே?


Jay
நவ 19, 2024 14:58

ஆயுதத்தில் வலிமை பெற்ற வல்லரசு நாடுகள் மோதி கொள்வது, உலகம் முழுவதும் பொருளாதார பின்னடைவு ஏற்படுத்துகிறது.


sankaranarayanan
நவ 19, 2024 13:50

பைடனுக்கு என்னாச்சு வீட்டுக்கு போகிற போக்கிலே சண்டையை மூடிவிட்டு போயிடுவாரு அதன் பிறகு ஆட்சிக்கு வரும் ட்ரம்புன்னா அதை சமாளிக்க வேண்டும் ஆதலால் உக்ரைன் அதிபர் சற்று யோசித்து சமாதானத்தையே விரும்ப வேண்டும் அதைத்தான் மோடியும் டிரம்பும் ஆதரிக்கின்றனர்


MADHAVAN
நவ 19, 2024 11:26

ஆட்சியை இட்டு போறபோக்கில அந்த பைடன் பண்ற வேலையைப் பாருங்க மக்களே? பைடன் பண்ணும் வேலைதான் இந்த அணைத்து பிரச்சனைக்கும் காரணம், இவனுக்கு இந்தியாவில கூட 3 சதவீதம் சாதிக்காரனுங்க ஆதரவு, ட்ரம்ப் வந்தவுடன் அந்த 3 சதவீதம் அப்புதான்,


GMM
நவ 19, 2024 10:49

உலகில் அமைதி நிலவ, ரஷியா, சீனா நாடு பிடிக்கும் ஆசையை நிறுத்த வேண்டும். இஸ்லாம், கிருத்துவம் மதம் பரப்பி பிற மத மக்களை அடிமைப்படுத்தும் எண்ணம் நிறுத்த வேண்டும். இப்போதும் அமைதியாக வாழ முடியவில்லை. உலக போர் வந்தாலும் மக்கள் மிரள போவது இல்லை.


கிருஷ்ணதாஸ்
நவ 19, 2024 10:10

உலகமே வேடிக்கைப் பார்க்கும் போராக ஏற்கனவே உள்ளது தொடரும்!


ஆரூர் ரங்
நவ 19, 2024 09:29

ஏற்கனவே ஒரு அண்டை நாட்டை ரஷ்யா பிடுங்கி ஆக்கிரமித்து விட்டதால் பயந்து போன உக்ரேன் மேல்நாடுகளின் உதவியை நாடியது. வேறு வழியும் இல்லை. ரஷ்யாவின் நாடு பிடித்து ஆக்கிரமிப்பு செய்யும் திருட்டு வேலையை அடக்கியே ஆகவேண்டும். நம்முடன் நட்பாக இருந்தாலும் தவறான முறையில் நடந்தால் தடுக்கத்தான் வேண்டும். இல்லையெனில் இவ்வியாதி உலகெங்கும் பரவும்.


Columbus
நவ 19, 2024 09:28

This decision of Biden administration is primarily to precipitate Russian attack that can lead to WW3 and to benefit US arms manufacturers and secondly to sabotage Trump 2.0 presidency.


Joy Kizha
நவ 19, 2024 20:45

It was Soviet Russia who occupied all the nearby countries for 100 years and ruled. After Soviet collapsed, Ukraine got NATO support because they are Europeans. What is the problem in this. Now Russia is worried. Read the history properly and put your comments.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை