உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவில் ரஷ்ய அதிபர் புடின்- வடகொரியா அதிபர் சந்திப்பு: ஒரே காரில் பயணம்!

சீனாவில் ரஷ்ய அதிபர் புடின்- வடகொரியா அதிபர் சந்திப்பு: ஒரே காரில் பயணம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: இரண்டாம் உலகப்போர் வெற்றி கொண்டாட்டத்தின் 80ம் ஆண்டு விழா முன்னிட்டு சீனா நடத்திய ராணுவ அணிவகுப்பை பார்வையிட வந்த ரஷ்ய அதிபர் புடின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் இரண்டாம் உலகப்போர் வெற்றி கொண்டாட்டத்தின் 80ம் ஆண்டு விழா முன்னிட்டு ராணுவ அணுவ வகுப்பு நடந்தது. இந்த அணி வகுப்பில் 25க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.அப்போது, பீஜிங்கில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை ரஷ்ய அதிபர் புடின் சந்தித்தார். இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட பிறகு, இரு தலைவர்களும் அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்தனர். முன்னதாக இருவரும் பேச்சுவார்த்தைக்கு ஒரே காரில் பயணம் செய்தனர் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்து உள்ளது. சந்திப்பின் போது ரஷ்யாவிற்கு உதவுவது வட கொரியாவின் கடமை என்று கிம் ஜாங் உன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Tamilan
செப் 03, 2025 23:56

மோடி பெரிய ஆளா? புதினா? வடகொரியா அதிபரா?


அப்பாவி
செப் 03, 2025 22:35

மோடியும் புட்டினும் நேத்திக்கி போனது வேற காரு. இன்னிக்கி இவிங்க போறது வேற காரு. ரூட்டே வேற வேற.


sankaranarayanan
செப் 03, 2025 19:32

ஒரே காரில் டிரம்பும் மோடியும் ஒன்றாக சென்றது ஒரு சமயம் ஒரு காலத்தில் இருந்தது மோடி டிரம்பை முழுதும் நம்பினார் குஜராத்திருக்கு டிரம்பை அழைத்து தகுந்த மரியாதை கொடுத்தார் ஆனால் மோடியை புறமுதுகில் டிரம்பு குத்திவிட்டார் இனி அந்த காயம் ஆறவே ஆறாது டிரம்பினால் இந்திய அமெரிக்க உறவிற்கு பந்தகம் உண்டாயிற்று எப்போதுதான் இது சீராகுமோ தெரியவில்லை


raja
செப் 03, 2025 17:23

சீனா அதிபர் என்றும் தனது நிலையை விட்டுக் கொடுக்க மாட்டார்


சமீபத்திய செய்தி