உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ட்ரோன் தாக்குதலில் 5 பேர் பலி; உக்ரைனுக்கு பதிலடி கொடுத்தது ரஷ்யா!

ட்ரோன் தாக்குதலில் 5 பேர் பலி; உக்ரைனுக்கு பதிலடி கொடுத்தது ரஷ்யா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: கிழக்கு உக்ரைன் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவும் இந்த போர் தொடர்கிறது. ஆபரேஷன் சிலந்தி வலை என்ற பெயரில், ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல், உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c5dweaot&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தாக்குதலில், 30 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது, ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், கிழக்கு உக்ரைன் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது.உக்ரைனில் டொனெட்ஸக் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் உக்ரைனுக்கு மிகப் பயங்கரமான பதிலடி தருவதற்கு ரஷ்யா தயாராகி வருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sridhar
ஜூன் 03, 2025 14:51

இந்த சண்டை ஆரம்பிச்சதே அமெரிக்கா ரசியாவுக்கு செக் வைக்கத்தான். ஆனா இப்போ அமெரிக்காக்காரன் விலகிட்டான். துட்டும் இல்லாம ஆயுதங்களும் இல்லாம எந்த டேஷுக்கு உக்ரைன் இந்த போரை நடத்திட்டு இருக்குன்னே தெரியல. மொத்தத்துல ஐரோப்பாவே நாசமாவப்போகுது. சரி நமக்கென்ன பாப்கார்ன வச்சுக்கிட்டு வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்


Palanisamy Sekar
ஜூன் 03, 2025 09:31

ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஒரு பகடைக்காயாக பயன்படுத்துகின்றார்கள். அது தெரியாத நிஜ கோமாளி ஐரோப்பிய நாடுகள் கொடுக்கும் உதவி என்கிற போர்வையில் நாட்டையே சீரழித்துக்கொண்டுள்ளார் இந்த உக்ரைன் கோமாளி. ரஷ்யா இதுதான் சமயம் என்று தன்னிடம் உள்ள ஆயுதங்களை பரிசோதிக்க உக்ரைனை பயன்படுத்தி துவம்சம் செய்கின்றது. இதில் பஞ்சாயத்து என்கிற பெயரில் ட்ரம்ப் அவ்வப்போது தேவையில்லாமல் ஆலோசனை கூறுவார். நல்லா இருந்த நாட்டை நாசமாக்கிய கோமாளியை உக்ரைன் மக்கள் துரதியடித்தால் மட்டுமே நிம்மதியை தேடலாம்


Nada Rajan
ஜூன் 03, 2025 09:23

ரஷ்யாவுக்கு வேற வேலை கிடையாது... ஒரே தாக்குதல் தாக்குதல்


புதிய வீடியோ