உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத் தொடங்கிய எரிமலை: ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி

500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத் தொடங்கிய எரிமலை: ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: 500 ஆண்டுகள் கழித்து ரஷ்யாவில் எரிமலை மீண்டும் சீறத் தொடங்கி உள்ளது, ஆச்சரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.கம்சட்காவில் கிராஷெனின்னிகோவ் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலையானது கடைசியாக 15ம் நூற்றாண்டில் தான் சீற்றம் கொண்டு வெடித்துச் சிதறியது. அதன்பின்னர் எரிமலையின் சீற்றம் குறைந்து அமைதியாக இருந்து வந்துள்ளது. இந் நிலையில், 500 ஆண்டுகள் கழித்து இந்த எரிமலை தற்போது மீண்டும் வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளது. ஒரே இரவில், கிட்டத்தட்ட 6 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் புகை சூழ்ந்தது. எரிமலை வெடித்துச் சிதறியதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு இதே கம்சட்காவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் நீட்சியே இது, மேலும் பல எரிமலைகள் வெடித்துச் சிதற வாய்ப்பு உள்ளது என்று காலநிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை