உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தீவிரம்: முன்னாள் பார்லி சபாநாயகர் சுட்டுக்கொலை

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தீவிரம்: முன்னாள் பார்லி சபாநாயகர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: உக்ரைனில் 500க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைனின் முன்னாள் பார்லிமென்ட் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி சுட்டுக் கொல்லப்பட்டார்.ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்தார். ஆனால் ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.உக்ரைனில் உள்ள கட்டடங்கள் மற்றும் ட்ரோன் தயாரிப்பு நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. தெற்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 28 பேர் காயமடைந்தனர்.முன்னாள் பார்லிமென்ட் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி லிவிவ் உயிரிழந்தார். இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரது குடும்பத்தினருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார். கொலையாளியைத் தேடும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Tamilan
ஆக 30, 2025 17:35

மோடி போரை நிறுத்த எடுத்த முயற்சிகள் அனைத்தும் வேஸ்ட் . உக்ரைனோ மாதம் 500 டிரோன்களை தயார் செய்யப்போகிறது . அதனால் பயந்துபோய் மோடியிடம் தஞ்சமடையதான் இந்தியா வருகிறார் என்று இனியும் பிரச்சாரம் செய்யாதது ஏன்?


Tamilan
ஆக 30, 2025 17:33

புதினையே கொலை செய்ய முயற்சித்தவர்கள். மோடியின் வெற்றிகொட்டாட்ட குழுவையும் பதம் பார்த்தவர்கள் . இனியும் என்னவெல்லாம் நடக்கும் ?


முக்கிய வீடியோ