உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நிலநடுக்கத்தால் மீண்டும் குலுங்கியது ரஷ்யா; ரிக்டரில் 6.2 ஆக பதிவு

நிலநடுக்கத்தால் மீண்டும் குலுங்கியது ரஷ்யா; ரிக்டரில் 6.2 ஆக பதிவு

மாஸ்கோ: ரஷ்யாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ரஷ்யாவில் கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக நிலநடுக்கம் பதிவானது. அந்நாட்டில் பதிவான நிலநடுக்கங்களிலேயே இது வலிமையானதாக பதிவாகி உள்ளது. ஆனால் எந்த உயிரிழப்பும் இதனால் ஏற்படவில்லை என்று அந்நாடு அறிவித்து இருந்தது.இந் நிலையில், ரஷ்யாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள குரில் தீவு பகுதியில் கிழக்கே இந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. இந்திய நேரப்படி வெள்ளி பின்னிரவு 11.50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளதாகவும், அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது பற்றிய எந்த தகவல்களும் இல்லை. சுனாமி பற்றிய அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. முன்னதாக, கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்த 16 மணி நேரத்திற்குள், ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக 125 முறை பின் அதிர்வுகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ