உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெல்லாவின் ஆண்டு வருமானம் ரூ.846 கோடி

மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெல்லாவின் ஆண்டு வருமானம் ரூ.846 கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யநாதெல்லா 2025ம் ஆண்டில் 96.5 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் 846 கோடி ரூபாய்) சம்பளமாக பெற்றுள்ளார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யநாதெல்லா கடந்த 2014 ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ ஆக பதவியேற்றார். அவரது தலைமையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொடிகட்ட பறக்க துவங்கியது. லிங்க்ட் இன் சமூக வலைதளம் உள்ளிட்டவற்றை கையகபடுத்தியதுடன், ஓபன் ஏஐ உடன் நீண்ட கால ஒப்பந்தம் செய்து மைக்ரோசாப்ட் தயாரிப்புகளில் ஏஐ வசதியை கொண்டு வருவதற்கும் சத்யநாதெல்லாவின் பங்கு மிக முக்கியமானது.2025 ம்ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகளின் விலை 25 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளை காட்டிலும் இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. முதல் காலாண்டில் கிடைத்த வருமானம் குறித்த அறிக்கையை அடுத்த வாரம் இந்த நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், 2025ம் ஆண்டில் சத்யநாதெல்லாவுக்கு கிடைத்த வருமானம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.இதன்படி கடந்த 2024 ம் ஆண்டு அவருக்கு 79.1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 694 கோடி ரூபாய்) வருமானம் கிடைத்த நிலையில் 2025 ல் 84 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது.அதில், பங்குகள் மூலம் 84 மில்லியன் டாலரும்( 736 கோடி ரூபாய்), ஊக்கத்தொகை மூலம் 9.5 மில்லியன் டாலரும்( 83 கோடி ரூபாய்), அடிப்படை வருமானம் மூலம் 2.5 மில்லியன் டாலரும்(21 கோடி ரூபாய்) அவருக்கு கிடைத்துள்ளது. அவரை தவிர்த்து தலைமை நிதி அதிகாரி எமி ஹூட்டுக்கு 29.5 மில்லியன் டாலரும்( இந்திய மதிப்பில் 258 கோடி ரூபாய்)மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வணிகப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்ட ஜட்சன் அல்தோப்புக்கு 28.2 பில்லியன் டாலரும்( இந்திய மதிப்பில் 247 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
அக் 22, 2025 22:54

இவருடைய திறமைக்கு இது குறைந்த சம்பளம் தான். இவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து நிறுவனம் சக்கைபோடு போடுகிறது.


Balaji
அக் 22, 2025 21:47

இவர்கள் ஆட்குறைப்பு செய்வது எதற்கு என்றே எனக்கு விளங்கவில்லை... இவருடைய ஆண்டு வருமானத்தில் பத்து சதமானம் குறைத்தாலே ஒரு நூறு பேருக்கு வேலை தரலாம்.. இவர்களுடைய பொழுதுபோக்கிற்கு அளவே இல்லையா?


Vasan
அக் 22, 2025 20:18

இவ்வளவு குறைந்த வருமானம் எப்படி போதும்? மைக்ரோசாப்ட் நிறுவனம் அவருக்கு ஊதிய உயர்வு கொடுத்து, அவரது வாழ்வாதாரம் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


Kudandhaiyaar
அக் 22, 2025 20:06

இது என்ன பிரமாதம். தமிழத்தில் ஒரு குடும்பத்துக்கு செலவே இல்லாமல் வருமானம் மட்டும் வந்து கொண்டிருக்கிறதே. அவர்கள் உங்க கணக்கில் வரமாட்டார்களா.


nagendhiran
அக் 22, 2025 19:36

என்னை விட கம்மிதான் அல்லி விடுவோம் காசா பணமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை