உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: போராட்டக்காரர்கள் 30 பேர் பலி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: போராட்டக்காரர்கள் 30 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் பொருளாதார சூழ்நிலை மற்றும் அரசியல் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. அப்போது பாதுகாப்புப் படையினருடன் நடந்த வாக்குவாதம் செய்த வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை கண்டித்து, அவரது உடல் வைக்கப்பட்டு இருந்த மருத்துவமனை முன்பு போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்களை அப்புறப்படுத்த பாதுகாப்புப் படையினர் முயன்றனர்.அதில் இரு தரப்புக்கு இடையே தள்ளு முள்ளு உருவாகி மோதல் ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cx1xor3z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆனால் 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதனை போராட்டக்காரர்கள் மறுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kumar Kumzi
ஜூன் 09, 2026 17:10

காட்டுமிராண்டி மூர்க்க விஷ பாம்புகள் ஒன்றையொன்று விழுங்கி அழித்துக்கொல்லும் கொடூர மிருகங்கள்