உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்: புடின் ஒப்புக் கொண்டதாக டிரம்ப் தூதர் தகவல்

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்: புடின் ஒப்புக் கொண்டதாக டிரம்ப் தூதர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அலாஸ்காவில் நடந்த உச்சிமாநாட்டின் போது, உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க ரஷ்ய அதிபர் ஒப்புக் கொண்டார்'', என டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் கூறியுள்ளார்.அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சர்வதேச நாடுகள் உற்றுநோக்கிய, 'அமைதியை நோக்கி' என்ற பெயரிலான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையிலான நேரடி சந்திப்பு, ஆக்கப்பூர்வமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உக்ரைனுடனான போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் ஏற்படவில்லை. நாளை டிரம்ப்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்க உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=quj6q9f9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யா மீதான விவகாரத்தில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. காத்திருங்கள் எனக்கூறியுள்ளார்.இதனிடையே, டிரம்ப்பின் சிறப்பு தூதரான ஸ்டீவ் விட்காப் கூறுகையில், அலாஸ்காவில் நடந்த சந்திப்பின் போது, உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், ரஷ்யா அதிபர் புடினும் ஒப்புக் கொண்டுள்ளனர். இது முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும் எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kasimani Baskaran
ஆக 18, 2025 04:06

டிரப்பரை நம்பி ஏமாந்துதான் மிச்சம்.


Ramesh Sargam
ஆக 17, 2025 23:18

காங்கிரஸ், திமுக ரெண்டும் நாங்கள் ஊழல் செய்யமாட்டோம் என்று சொன்னால் நம்புவீர்களா?


M Ramachandran
ஆக 17, 2025 22:05

ஜெலன்ஸ்கி ஒரு கீ கொடுத்தால் ஆடும் பொம்மை. ஆட்டுவிப்பவர்கள் ஐரோப்பிய யு நின் மற்றும் அமெரிக்கா. அவர்கள் சொல்லுக்கு தான் இவன் ஆட்டம் ஆடுவான் பாகிஸ்தான் முநீர் பொற்கால . இவனைய பதவியிலிருந்து தூங்கினால் எல்லாம் சரியாகி விடும்.


Palanisamy T
ஆக 17, 2025 21:57

இந்த சேதி நம்பக் கூடியதாகயில்லை. மேலும் எந்த அடிப்படையில் உத்தரவாத மென்றும் அறியமுடியவில்லை . புடின் நம்பக் கூடிய தலைவனுமில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.


Ramesh Sargam
ஆக 17, 2025 21:51

இந்தியா, பாகிஸ்தான் போரை தான்தான் நிறுத்தியதாக தம்பட்டம் அடித்தார் இந்த ட்ரம்ப். இப்பொழுது உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம், ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாக தூதர் மூலமாக ட்ரம்ப் தகவல். இந்த வெத்து தம்பட்டம் அடிப்பதில் ட்ரம்பை யாரும் மிஞ்சமுடியாது, தமிழகத்தில் உள்ள ஒருவரை தவிர்த்து.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 18, 2025 05:39

நான்-பயலாஜிக்கலி ஸ்பீக்கிங், இதெல்லாம் ஜுஜுபி நம்ம ஜீக்கு. உனக்கு தெரியாததல்ல


SP
ஆக 17, 2025 21:47

ட்ரம்பரின் பல பொய்களில் இதுவும் ஒன்று


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 17, 2025 21:46

பாலைக் குடிக்கமாட்டேன். பூனை உத்தரவாதம்.


புதிய வீடியோ