உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / என்னை இங்கேயே சுட்டுத்தள்ளுங்கள்: ஷேக் ஹசீனாவின் திக் திக் நிமிடங்கள்

என்னை இங்கேயே சுட்டுத்தள்ளுங்கள்: ஷேக் ஹசீனாவின் திக் திக் நிமிடங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா : வங்கதேசத்தில் இருந்து வெளியேறும் முன் அந்நாட்டின் அப்போதைய பிரதமரான ஷேக் ஹசீனா, 'என்னை இங்கேயே சுட்டுத்தள்ளுங்கள்; இதே இடத்திலேயே புதையுங்கள்' என, குறிப்பிட்டது தெரியவந்துள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கடந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில், மாணவர்கள் போராட்டத்தின்போது மனிதகுலத்திற்கு எதிராக நடந்த குற்றச்செயல்களை, வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றங்களுக்கான தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.இந்த விசாரணையில் வங்கதேச அரசின் தலைமை வழக்கறிஞர் முகமது தாஜுல் இஸ்லாம் எடுத்துரைத்த வாதம் பற்றி வங்கதேசத்தின் பிரபல நாளிதழான 'புரோத்தம் ஹக்'கில் குறிப்பிட்டுள்ளதாவது:வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம், கடந்த 2024, ஆகஸ்ட் 5ம் தேதி உச்சக்கட்டத்தை எட்டியது. அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவை, ராணுவ உயரதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் சந்தித்து பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்த ஹசீனா, மாணவர்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கிச்சூடு நடத்தும்படி உத்தரவிட்டார். எனினும், வங்கதேசம் முழுதும் போராட்டம் தீவிரமடைந்தது.எனவே, பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ஹசீனா, 'என்னை இங்கேயே சுட்டுத் தள்ளுங்கள்; இங்கேயே புதைத்து விடுங்கள்' என்றார். எதற்கும் பிடிகொடுக்காமல் இருந்த ஹசீனாவிடம், அமெரிக்காவில் இருந்த அவரது மகன் சாஜிப்பை தொடர்புகொண்டு பேசசெய்தோம்.இதைத்தொடர்ந்து ஷேக் ஹசீனா தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததுடன், ஹெலிகாப்டர் வாயிலாக இந்தியாவிற்கு தன் சகோதரியுடன் தஞ்சமடைந்தார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

metturaan
மே 29, 2025 14:46

எப்போது இட ஒதுக்கீடு போராட்டம் வலுப்பெற்றதோ அப்போதே இவர் நாட்டை நேசிக்கும் அதிபராக இருந்திருந்தால் இறங்கி வந்து சுமுகமான முறையில் தீர்வு கண்டு இருக்க வேண்டும். அதைவிடுத்து ஆணவமாக பேசி... நாட்டை... மூர்கர்கள் கை பற்றியபின் இப்போது அப்படி கூறினார் இப்படி கூறினார் என்பதெல்லாம் கண்துடைப்பு


sankaranarayanan
மே 29, 2025 10:32

வங்கதேசத்திலும் திராவிட கழகம் இருக்கிறதா அவர்களுடைய கொடியைப்பார்த்தால் அதே கொடிதானே உள்ளது கருப்பும் சிகப்பும் எப்போது ஈவேரா அங்கே சென்றார் திராவிட கிஞ்சுகள் அங்கு என் செல்லவில்லை


கான்
மே 29, 2025 08:59

பத்திரமா எஸ்கேப் ஆயிட்டு.... அப்பிடி பேசினார். இப்பிடி பேசினார்னு சொல்ல வேண்டியது. 2009 லிருந்து 2024 வரை பதவி வெறி பிடித்து பிரதமரா இருந்தாச்சு. அதுக்கும் முன்னாடி ஒரு அஞ்சு வருஷமா பிரதமா இருந்தாச்சு. மத்தவங்களுக்கு எப்போ வாய்ப்பு வரும்.


Tetra
மே 30, 2025 15:49

இந்தியாவை ஒரே குடும்பம்‌ பரம்பரை‌பரம்பரயா 60 வருடம் ஆட்சி செய்து குட்டிச்சுவராக்கியதே.‌ அது பரவாயில்லயா


அப்பாவி
மே 29, 2025 08:54

நல்லா இல்லியே.


subramanian
மே 29, 2025 07:43

ஜனநாயகம் விட்டு சீ நாயகம் பக்கம் சென்று படுகுழியில் விழுவது என்று முடிவெடுத்து விட்டார்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை