உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொலை: 2 பேர் கவலைக்கிடம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொலை: 2 பேர் கவலைக்கிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர். அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவின் கோடோரஸ் டவுன்ஷிப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் சுட்டுக்கொல்லப்பட்டார். சந்தேக நபரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. கொல்லப்பட்ட அதிகாரிகள் எந்த சட்ட அமலாக்க நிறுவனங்களில் பணியாற்றினர் என்பதை அதிகாரிகள்வெளியிட மறுத்துவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

என்றும் இந்தியன்
செப் 18, 2025 16:12

அமெரிக்கா என்றால் அந்த காலத்தில் ஆகா ஓகோ நல்ல பண வரவு முழு சுதந்திரம் என்று டப்பா அடித்த நிலைமை மாறி அமெரிக்கா என்றால் நல் மக்கள் எதிர்ப்பு நாடு சட்டம் ஒழுங்கு அற்ற நாடு என்று இப்போது சுத்தமாக மாறி விட்டது அதவும் டிரம்ப் வந்தவுடன் அது மிக மிக அதிக நெகடிவ் உச்சத்தை தொட்டு விட்டது இப்போது


Ramesh Sargam
செப் 18, 2025 13:39

இதுபோன்ற கொடூர துப்பாக்கி சூட்டை நிறுத்தி உங்கள் நாட்டு மக்களை காப்பாற்றுங்கள்.


Ramesh Sargam
செப் 18, 2025 13:34

Mr Trumph அவர்களே முதலில் இந்த கொடூர செயலுக்கு ஒரு நிரந்தர முடிவு காணுங்கள். பிறகு இந்தியா மீது அதிக வரி விதிப்பதைப்பற்றி யோசிக்கலாம்.


cpv s
செப் 18, 2025 12:10

day by day this will go up


Rathna
செப் 18, 2025 11:41

அதிக அளவு மன நலம் குன்றிய மக்கள் உள்ள நாடு. இது தவிர அதிக அளவு மர்ம நபர்களை ஆப்கானிஸ்தானில், ஆப்பிரிக்காவில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்கிறார். இது தான் நடக்கும்.


Shivakumar
செப் 18, 2025 11:34

அமெரிக்கா நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது . இந்த லட்சனத்தில் இவர் போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா என்று அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கான். உண்மையில் இவருக்கு மூளை கலந்துவிட்டது. யாரிடம் என்ன பேசுகின்றோம் என்ற சுய நினைப்பில் இல்லை.


saravan
செப் 18, 2025 11:08

டிரம்ப் ஆட்சியில் அங்கு உள்ள மக்களுக்கு பாதுகாப்பில்லை இந்த ஆள் உடனே பதவி விலக வேண்டும்


Indian
செப் 18, 2025 10:32

டெக்சாஸில் அடுத்தவர் வீட்டு கதவை தட்டினால் முதலில் துப்பாக்கியால் சுடு அதற்குப்பிறகு யார் தட்டினார்கள் என்று பார்க்க வருவார்கள் ..இது தான் நிலைமை


Senthoora
செப் 18, 2025 10:01

சொந்த பிள்ளையே வீட்டுக்கு சூனியம் வைப்பானாம்.


HoneyBee
செப் 18, 2025 09:07

டிரம்ப் அண்ணா இதுதான் உங்க வீட்டுல. எதுக்கு இந்தியாவால் மூக்கு நுழைச்சி .... உங்க நாட்டில போதை மருந்து கலாச்சாரத்தை ஒழிங்க .. பின் பேசலாம் எங்க பாரதம் பற்றி


புதிய வீடியோ