உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதானி நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்வதா; இலங்கை அதிபருக்கு ரனில் கண்டனம்

அதானி நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்வதா; இலங்கை அதிபருக்கு ரனில் கண்டனம்

கொழும்பு : அதானி நிறுவனத்தின் எரிசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், இந்தியா உடனான இலங்கையின் வர்த்தக உறவு பாதிக்கப்படும் என, அந்நாட்டின் முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார்.நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவியபோது, அதிபராக இருந்தவர் ரனில் விக்ரமசிங்கே. அவரது ஆட்சியின்போது, இந்தியாவுடன் எரிசக்தி, வேளாண்மை, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் மேற்கொண்டு பொருளாதார நிலையை சீரமைத்தார்.இந்நிலையில், கடந்தாண்டு செப்டம்பரில் நடந்த தேர்தலில், இலங்கை அதிபராக அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார்.தற்போதைய அதிபரான அவர், கடந்த பிப்., 13-ல் இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமம் சார்பாக, இலங்கையின் மன்னார் உட்பட இரண்டு இடங்களில் அமைய இருந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை ரத்து செய்தார். அதானி குழுமத்தை விட, பாதி விலைக்கு மின்சாரம் தருவதற்கு வேறு நிறுவனங்கள் டெண்டர் வழங்கியதாகவும் விளக்கம் அளித்தார்.இதையடுத்து, ஏற்கனவே 42.80 கோடி ரூபாய் செலவிட்ட நிலையில், தன் 3,425 கோடி ரூபாய் மதிப்பிலான எரிசக்தி திட்டத்தை கவுரவமாக திரும்பப் பெறுவதாக அதானி குழுமம் தெரிவித்தது.அதிபர் அனுராவின் இந்த செயலுக்கு, முன்னாள் அதிபர் ரனில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏப். 5-ம் தேதியன்று, நம் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். இந்த சூழலில் ரனில் விக்ரமசிங்கே அளித்த பேட்டி:இலங்கை இன்னமும் பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடவில்லை. என் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களை தற்போதைய அரசு நிறைவேற்றாவிட்டால், மிகப்பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். சர்வதேச முதலீட்டாளர்கள், இரு தரப்பு கடன் வழங்குபவர்கள் வாயிலாக ஏற்படும் மறுகட்டமைப்பு திறனை கொண்டே சர்வதேச நிதியத்தில் உத்தரவாத கடன் பெற முடியும்.எனவே, இந்தியாவுடன் அதிகபட்ச அளவிலான பொருளாதார ஒத்துழைப்பை பேணுவதே இலங்கைக்கு நல்லது. ஆனால், என் ஆட்சியில் துவங்கியவற்றை எல்லாம் இன்றைய அரசு முற்றிலுமாக கைவிடுவது வருத்தமளிக்கிறது.அதானி குழும ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் எந்த காரணமும் இல்லை. இது, இந்தியாவின் மற்ற அனைத்து முதலீடுகளிலும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

SP
மார் 25, 2025 21:49

சீனா வந்து விடும் என்று சொல்லி சொல்லி நம்மிடம் எல்லா உதவிகளையும் பெற்றுக் கொண்டு நம் தேசத்திற்கு எதிராகவே இதுவரை இலங்கை இருந்து வந்திருக்கிறது இலங்கை விஷயத்தில் மத்திய அரசு திடமான முடிவு எடுக்க வேண்டும். மாலத்தீவில் நடந்தது போல் இலங்கையை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


N Sasikumar Yadhav
மார் 25, 2025 13:58

பாரதத்திற்கு ஏதாவது பங்கம் வந்தால் சந்தோஷப்படும் கேடுகெட்டவனுங்க இருக்கிற கட்சிகள்


Apposthalan samlin
மார் 25, 2025 10:36

ஒரு தடவை காங் ஆட்சிக்கு வந்தால் பிஜேபி தில்லாலங்கடி வேலை எல்லாம் தெரியும்


Shekar
மார் 25, 2025 11:58

தம்பி பஸ்ஸ்டாண்ட் வந்திரிச்சி தூங்காதீங்க, எந்திரிங்க, இறங்குங்க,


Srinivasan M
மார் 25, 2025 13:17

போபோர்ஸ், நேஷனல் ஹெரால்ட் , 2ஜி ஸ்பெக்ட்ரம் , augustaland , Commonwealth Games Scam 2010


ஆரூர் ரங்
மார் 25, 2025 09:29

ஜகத் தின் 26000 கோடி முதலீடுக்கும் இதே நிலைமை ஏற்படுமா?. பூட்ட கேஸ்?


Sampath Kumar
மார் 25, 2025 08:45

ஒரு நாட்டின் அதிபருக்கு ஹியரியும் தனது நாட்டுக்கு ஏது தேவை என்று இந்த ரணில் ஒரு இந்திய கைக்கூலி அதன் ஏதிர்ப்பு தெரிவிக்கிறார்


Shekar
மார் 25, 2025 09:46

பிறந்த நாட்டையே பழிக்கும் கேடுகெட்ட ஜென்மம்


Anand
மார் 25, 2025 10:55

உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைக்கும் கேடுகெட்ட இழிபிறவி....


N Sasikumar Yadhav
மார் 25, 2025 14:00

உங்கள மாதிரியே உங்க வார்த்தை மிக மிக கேவலமான வார்த்தை


அப்பாவி
மார் 25, 2025 08:03

ஓஹோ... இப்போ இலங்கை டூர் அதுக்காகதானா? சூப்பர் தேஷ்பக்தி ஹைன்.


அப்பாவி
மார் 25, 2025 08:02

அதானே.. ஏற்கனவே கமுஷன் வாங்கியாச்சு. எத்தனை தடவை வாங்கறது?


Shekar
மார் 25, 2025 09:49

வாங்கியிருந்தா ஆதாரத்தோடு ஒங்க வில்சனை வைத்து கேஸ் பைல் பண்ண சொல்லு. அடிச்சிவிடு அடிச்சிவிடு இதுதானே உபி யோட தாரக மந்திரம்


Nandakumar Naidu.
மார் 25, 2025 07:31

நம் அண்டை நாடான இலங்கை எவ்வளவு செய்தாலும் நன்றி கெட்டு நடக்கிறது. இது இரண்டாவது பாகிஸ்தான் போல.


Priyan Vadanad
மார் 25, 2025 07:25

இதை அதானிக்கு எந்த நஷ்டமும் வராது. ஏதாவது நஷ்டம் வந்திருந்தால் அந்த நஷ்டங்களை நம்முடைய வரிப்பணத்தில் சமாளித்துக் கொள்ளலாம். அதானியின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி.


R.RAMACHANDRAN
மார் 25, 2025 07:22

அதானி தான் இந்தியா, அதானி பாதித்தால் எதையும் செய்வார் என்பது இதிலிருந்து தெளிவு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை