உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிங்கப்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு; விமானி சாதுர்யத்தால் தப்பிய பயணியர் 322 பேர்

சிங்கப்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு; விமானி சாதுர்யத்தால் தப்பிய பயணியர் 322 பேர்

சென்னை: சிங்கப்பூர் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில், விமானி சாதுர்யமாக செயல்பட்டதால், 322 பயணியர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் நள்ளிரவு 12:00 மணிக்கு விமானம் இயக்கப்படுகிறது. நேற்று இரவு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இந்த விமானம் தயாரானது.இதில், பயணியர், விமான குழுவினர் என, 322 பேர் இருந்தனர். விமானம் ரன்வேயில் ஒடத் தொடங்கியபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, விமானிக்கு எச்சரிக்கை அலாரம் அடித்தது.இதை கண்டுபிடித்த விமானி, உடனே விமான இயக்கத்தை நிறுத்தினார். விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.ரன்வேயில் நின்ற விமானம், இழுவை வண்டி வாயிலாக, 'பே' எனும் நிறுத்தும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. விமானம் தாமதமாக புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தின் உள்ளே கோளாறு சரி செய்யும் முயற்சியில் இறங்கினர். உள்ளே இருந்த பயணியர் 'லவுஞ்ச்' பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.இன்று அதிகாலை 5:00 மணி ஆகியும் விமான பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து, விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.விதிமுறைகளின்படி பயணியர் அருகில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mani . V
அக் 04, 2026 07:20

இந்த ஸ்கூட் விமானங்கள் 1990 - 2000 காலகட்டங்களில் தமிழ்நாட்டில் இயங்கிய டவுன் பஸ்சை விடவும் கேவலமாக, ஓட்டை, உடைசலாக இருக்கும். நான் நான்கு முறை குடும்பத்துடன் பயணித்து கடவுள் புண்ணியத்தில் உயிர் பிழைத்தோம். மலிவுக்கட்டணம் என்ற ஒரே காரணத்துக்காக இதை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.


karupanasamy
அக் 04, 2026 10:36

ஸ்கூட் விமானங்கள் பழைய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போயிங் விமானங்கள்.நோ பிரில்ஸ் பட்ஜெட் ஏர் லைன் என்பதால் இருக்கைகள் மிக நெருக்கமாக இருக்கும். விமானத்தில் நடுவில் இருக்கும் கழிப்பறை அகற்றப்பட்டு அதிகமான இருக்கைகள் அமைக்கப்பட்டுஇருக்கும். சென்னையிலிருந்து மூன்று மணிநேர பயனத்திற்குஒகே ஆனால் சிங்கப்பூரிலிருந்து ட்ரான்சிட்டில் மற்றுமொரு பயணம் என்றால் தவிர்ப்பது நல்லது. ஆனால் காஸ்ட் சேவிங் எபெக்ட்டிற்காக சிங்கப்பூர் ஏர் லைன் பயணியர் சேவை தரம் அடிமட்டத்திற்கு சென்று விட்டது. பொதுவாக எந்த ஏர் லைன் ஆகா இருந்தாலும் சிங்கப்பூரிலிருந்தோ, கேஎல் லிருந்தோ ஐரோப்பா அல்லது அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களில் சேவை தரம் இந்திய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் சேவை தரத்தைவிட பலமடங்கு நன்றாக இருக்கும். இந்த வித்தியாசத்திற்கு காரணம் தெரியவில்லை.


அமைதி தூதர்
அக் 04, 2026 02:47

இந்த விமானத்தில் பெரும்பாலும் அமேரிக்கா பயணம் செய்வார்கள்


Ramesh Sargam
அக் 03, 2026 22:53

ஒருவேளை ஹமாம் அல்-ஹ மா மி போன்ற ஆட்கள் உள்ளே புகுந்து விமானத்துக்கு சேதம் ஏட்படுத்தி இருக்கலாம். ஆக, அந்த அமைதி மார்கத்தினரின் இரண்டாவது சதி முயற்சியும் தோல்வி.


Senthoora
அக் 04, 2026 08:56

உடனே முழங்காலுக்கும் தலைக்கும் முடிச்சுபோட்டுட்டீங்களே?


Rasheed Ahmed A
அக் 04, 2026 10:19

வன்மம்


Rasheed Ahmed A
அக் 04, 2026 10:20

வன்மம்?


SULLAAN
அக் 04, 2026 18:10

ஆமா வன்மம் படித்தவர்களின் செயலாகும். பிடித்து என்கவுன்ட்டர் செய்ய வேண்டும். இஸ்ரேல் லுக்கு நாடு கடத்த வேண்டும். நன்கு சுளுக்கு எடுப்பார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை