உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா அரசு நிர்வாகம் முடக்கத்தால் கடும் பாதிப்பு: சமரசம் செய்ய வாய்ப்பில்லை என்கிறார் டிரம்ப்

அமெரிக்கா அரசு நிர்வாகம் முடக்கத்தால் கடும் பாதிப்பு: சமரசம் செய்ய வாய்ப்பில்லை என்கிறார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்கா அரசு நிர்வாகம் முடக்கம் தொடர்பாக, ஜனநாயகக் கட்சியினருடன் விரைவில் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், முந்தைய அதிபர் ஜோ பைடன் அரசின் பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைத்து வருகிறார். இதனால், அமெரிக்க பார்லிமென்டில் டிரம்ப் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், அரசு துறைகளுக்கான நிதியை விடுவிக்க பார்லிமென்டின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிதி முடக்கத்தால், 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர். அதே நேரத்தில், 7.30 லட்சம் பேர் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.இதனால், அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல், அன்றாட பணிகள் ஸ்தம்பித்துள்ளன. அரசு நிர்வாகம் முடக்கம், 6வது வாரத்தில் நுழைந்து, அமெரிக்கா முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை ஊதியமின்றி தவிக்கும் நிலையில், அதிபர் டிரம்ப் பின்வாங்க மறுத்துவிட்டார்.இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: மலிவு விலை பராமரிப்பு சட்டத்தின் வரி சலுகைகளை நீட்டிக்கக் கோரும் ஜனநாயகக் கட்சியினருடன் சமரசம் செய்ய வாய்ப்பில்லை. குடியரசுக் கட்சியினர் பணி நிறுத்தத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வந்து பெரும்பாலான சட்டங்களுக்கு 60 சென்ட் ஓட்டுக்கள் தேவைப்படும் முறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

bharathi
நவ 09, 2025 21:36

It is not a governance..looks like a dictatorship


Ramaraj P
நவ 09, 2025 11:18

அரசு நிர்வாக முடக்கம் முடிவிற்கு வந்த பிறகு. எவ்வளவு நாள் சம்பளம் வரவில்லையோ அதை மொத்தமாக அரசு ஊழியர்களுக்கு கொடுத்து விடுவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் வேலையே செய்யாமல் அந்த சம்பளத்தை இந்த அரசு ஊழியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.


RAMESH KUMAR R V
நவ 09, 2025 10:56

அதிகார துஷ்ப்ரயோகம் தோல்வியில் தான் முடியும்.


Amar Akbar Antony
நவ 09, 2025 10:54

சேமிப்பு என்றால் இந்திய மக்களிடம் கேட்கவேண்டும். சேமிப்பு பழக்கத்தை பாரத மக்கள் கைவிடவேண்டுமென்ற நோக்கத்தில் அமெரிக்கா போன்ற நாடுகள் பல உத்திகளை கையாள்கின்றன. அதிலொன்று சேமிப்பின் முதுகெலும்பான எல் ஐ சி யை முறியடிக்க அதானிக்கும் அம்பாணிக்கும் மாறன்களுக்கும் கோடீஸ்வரர்களல்லவா ஆகவே மாறன்களையும் சேர்க்கிறேன் எல் ஐ சி பங்கு கொடுக்கிறதென்ற உண்மைக்கு விஷமத்தை இங்கு பரப்புகிறது. பாரத மக்கள் பாரம்பரியத்தை கைவிடமாட்டார்கள். எனவே நல்ல தலைமையிடம் நிர்வாகத்தை தந்துள்ளார்கள். தமிழகம் தராவிட்டாலும் மோடியென்ற தங்கத்தலைவனையும் அவருடனுள்ள அதிகாரிகளையும் அமைச்சுகளையும் நாம் நம்பலாம். ஜெய் ஹிந்த்


arunachalam
நவ 09, 2025 10:04

பாவம் அமெரிக்க மக்கள். இந்த ஆளுக்கு ஓட்டுபோட்டோமேன்னு இப்ப ரொம்ப ஸ்ரமப்படுவார்கள். இது தானே தமிழகத்தின் நிலை.


Naga Subramanian
நவ 09, 2025 09:22

பாரதத்தில் பிறந்த ஒவ்வொருவரும், வேம்பு போல் உறுதியும், அரிய திறனும் உடையவர்களே ஆனால் அந்த முளைத்திறனை மேற்கத்திய நாடுகள் தங்கள் நலனுக்காக பறித்துக்கொண்டு, சிறு சிறு பாராட்டுகளையும் பணத்துண்டுகளையும் வீசுகின்றனர். அந்த துண்டுகளுக்காக, தமது பெற்றோர்களை அனாதைகளாக்கி, முதியோர் இல்லங்களில் விட்டு செல்லும் நிலை — எவ்வளவு பரிதாபம் இத்தகைய அவல நிலை நம்மிடம் நிலவ வேண்டாமே நம்மை நாமே மதித்து, நமது மண்ணையும், மனதையும் காக்க வேண்டும்.


Ramesh Sargam
நவ 09, 2025 09:11

அமெரிக்க வரலாற்றிலேயே மிக மிக மிக மோசமான அதிபர் இவராகத்தான் இருக்கும். இப்படியே இவர் நடந்துகொண்டால் அமெரிக்க மக்கள் ஆயிரக்கணக்கில் HELP ME, HOMELESS என்கிற பதாகைகளுடன் வீதியில் நடமாடவேண்டியிருக்கும்.


KOVAIKARAN
நவ 09, 2025 09:05

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்று ட்ரம்ப் அவர்கள் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என்று கூறி பிடிவாதம் செய்கிறார். முந்தைய அரசு கொண்டுவந்த பல திட்டங்களை டிரம்ப் நிறுத்திவிட்டார். அவைகளில் ஒன்றான பொருளாதாரத்தில் மலிந்த அமெரிக்கா மக்களுக்கு கொடுத்த வரிச்சலுகையை டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின் அதை நிறுத்தியதால், தற்போதுள்ள எதிர்க்கட்சியாளர்கள் இவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதிக்கு அளவற்ற அதிகாரம் இருந்தாலும், நிதியைப் பொறுத்தவரை இந்த மசோதாக்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் இரண்டிலும் 60% ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்பட வேண்டும். எனவே டிரம்ப் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது போன்ற முடிவுகளால் அமெரிக்காவின் மத்திய அரசு ஊழியர்கள் FEDERAL EMPLOYEES தான் கஷ்டப் படுகிறார்கள். அமெரிக்காவில் நம் நாட்டில் உள்ளது போல மாத சம்பளம் வாங்கும் பெருவாரியான ஊழியர்களுக்கு சம்பளத்தில் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கம் இல்லை. வரும் வருமானத்தை அவ்வப்போது செலவழிப்பதேயே வாடிக்கையாக உள்ளனர். எனவே, அவர்களின் தற்போதைய நிலைமை மிகவும் பரிதாபம் தான். ஏற்கனவே, அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கத்தால் பல பொதுத்துறைகள் கடும் பாதிப்புக்குள்ளாகிவருகிறது. அதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது, விமான நிலையங்கள் தான். நேற்றைய செய்திகள் மூலம் 1200 உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்கள் றது செய்யப்பட்டதை நாம் அறிவோம். இதனால், அமெரிக்காவின் பொருளாதாரமும் மிகவும் மோசமாக பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே டிரம்ப் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இருவரும் பிடிவாதம் பிடிக்காமல் அமெரிக்கா மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு சமரசம் அடைந்து ஆவண செய்தால் அனைவருக்கும் நல்லது. செய்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


ranj
நவ 09, 2025 08:35

சென்ட் இல்லை செனட்


Ramesh Sargam
நவ 09, 2025 08:26

அமெரிக்காவில் நிதி முடக்கத்தால், 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர். அதே நேரத்தில், 7.30 லட்சம் பேர் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சிலநாட்களாக அமெரிக்க விமான நிறுவனங்கள் ஆயிரத்துக்கும் அதிகமான விமான சேவைகளை நிறுத்தி உள்ளது என்றும் ஒரு செய்தி. இதை படித்த பிறகாவது இந்தியர்கள் அமெரிக்காவில் மேற்படிப்புக்கு, வேலை செல்வதற்கு செல்லவேண்டுமா என்று யோசிக்கவேண்டும்.