உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  இலங்கை மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்வு

 இலங்கை மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்வு

கொழும்பு: இலங்கையில் நடப்பாண்டில், மூன்றாவது முறையாக மின்சார கட்டணத்தை உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், ஏற்கனவே நடப்பாண்டில், கடந்த ஜனவரியில் 15 சதவீதமும், ஏப்ரல் மாதத்தில் 8 சதவீதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்வை இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது. இதன்படி, 180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கான கட்டணம், 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு, 180 யூனிட்டுக்கும் குறைவாக பயன்படுத்தும் 95 சதவீத நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மின் உற்பத்திக்கு குறைந்த தரம் கொண்ட நிலக்கரியை வாங்கியதும், அதன் விளைவாக ஏற்பட்ட நஷ்டமுமே இந்த கட்டண உயர்வை நுகர்வோர் மீது சுமத்துவதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !