உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவின் போரை நிறுத்துங்கள்; ஐநாவில் உலகத் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு

ரஷ்யாவின் போரை நிறுத்துங்கள்; ஐநாவில் உலகத் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு

நியூயார்க்: ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவர தீர்க்கமாகச் செயல்படுமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஐநாவில் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.அப்போது அவர் பேசியதாவது: ரஷ்யாவின் போரை நிறுத்த வேண்டும். ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவர தீர்க்கமாகச் செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் ஆபத்தான உலகளாவிய ஆயுதப் போட்டியைத் தூண்டும் அபாயம் ஏற்படும். ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனின் எல்லைகளுக்கு அப்பால் போரை விரிவுபடுத்த முயற்சிக்கிறார்.ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஜெட் விமானங்கள் நேட்டோ வான்வெளியில் அத்துமீறி நுழைகின்றன. இப்போது ரஷ்ய ட்ரோன்கள் ஏற்கனவே ஐரோப்பா முழுவதும் பறக்கத் தொடங்கியுள்ளன, புடின் இந்தப் போரை விரிவுபடுத்துவதன் மூலம் அதைத் தொடர விரும்புகிறார். இப்போது யாரும் பாதுகாப்பாக உணர முடியாது. உக்ரைன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை ஆதரவாக இருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கும். நடந்து வரும் போரில் சோதிக்கப்பட்ட உபகரணங்களை வழங்குவோம். ரஷ்ய அதிபர் புடின் இந்த முழு அளவிலான ஆக்கிரமிப்பைத் தொடங்கியிருக்காவிட்டால் இவை எதுவும் நடந்திருக்காது. ஆயிரக்கணக்கான உக்ரைன் குழந்தைகளை கடத்துவது மற்றும் ஐரோப்பாவின் மிகப்பெரிய சபோரிஜியா அணு மின் நிலையத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். நேற்று, ஆலை மீண்டும் மின் தடைக்கு உள்ளானது.இது பேரழிவு அபாயத்தை அதிகரித்தது. இவ்வாறு ஜெலன்ஸ்கி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Nathan
செப் 25, 2025 18:06

இந்த போருக்கு காரணம் உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகள் தான் பலமுறை ரஷ்யா எடுத்து கூறியது எங்கள் அண்டை நாடுகள் நேட்டோ அமைப்பில் சேர்க்க கூடாது என்று. ரஷ்யாவின் இயற்கை வளங்களை எப்படியேனும் ஒரு நாள் கொள்ளையடித்து விட வேண்டும் என்று நேட்டோ நாடுகள் விரும்புகின்றன அதற்கு ஜெலன்ஸ்கி உடந்தையாக செயல்பட முயற்சி செய்கிறார் அதன் விலையை தற்போது உக்ரைன் கொடுத்து கொண்டு உள்ளது. இத்தோடு திருந்தவில்லை எனில் மேலும் உக்ரைன் நிலப்பரப்பில் இழப்பு ஏற்படும். இத்தோடு நிறுத்திக் கொண்டு மீதமுள்ள எல்லையை காத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே ரஷ்யா கைப்பற்றி உள்ள பகுதியை உக்ரைன் ரஷ்ய பகுதி ஆக ஏற்றுக் கொண்டால் மட்டுமே ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வரும். மீட்டு விடலாம் என்று பகல் கனவு கண்டால் இழப்பு உக்ரைனுக்கு தான்


Ramesh Sargam
செப் 25, 2025 01:42

போரை நிறுத்தவேண்டியது நீங்கள்தான். போரை நிறுத்த பல உலக தலைவர்கள், அமெரிக்காவின் டிரம்ப், இந்தியாவின் பிரதமர் மோடி போன்று பல தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அறிவுரையை நீங்கள், மற்றும் புடின் கேற்கவில்லை. இப்பொழுதும், உலக மக்கள் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன், நீங்களும், புட்டினும், ஒரு இடத்தில் கூடி, மனசுவிட்டு பேசி, உங்கள் நாட்டு மக்கள் நலன் கருதி போரை நிறுத்தி அமைதி காண முயலுங்கள்.


பேசும் தமிழன்
செப் 24, 2025 23:10

அட கோமாளி பயலே ..... நோட்டாவில் இணைய மாட்டோம் என்று கூறி விட்டாலே.....போர் உடனே நின்று விடும் ....ஆனால் அதை செய்யாமல் இருப்பது ,...உங்களுக்கு போரை நிறுத்த இஷ்டமில்லை என்று தானே அர்த்தம் .


M Ramachandran
செப் 24, 2025 23:10

சொல்வார் பேச்சை கேட்டு சுருட்டிக்கொண்டிருந்த வாலை நீட்டினது நீ தான். வாலை சுருட்டிக்கொள் பின் சரியாகி விடும் .


ramesh
செப் 24, 2025 22:28

நீ ஒரு கோமாளி நடிகன் . உன்னால் தான் இந்த போரே நடக்கிறது . இத்தனை மக்களின் உயிரிழப்புக்கு நீதான் ஒரே காரணம் . நீ புடின் உடன் தொடர்புகொண்டு நேட்டோ வில் சேர மாட்டேன் என்று கூறினால் போர் நின்று விடும் . இதை நீ செய்யாவிட்டால் நாட்டின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு தாரை வார்த்தது மற்றும் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு நீ மட்டுமே ஒரே காரணம் ஆவாய். இல்லாவிட்டால் உள்நாட்டு மக்களின் புரட்சியால் பிரெஞ்சு புரட்சி போல நீ அழியப்போவது நிச்சயம்


அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
செப் 24, 2025 22:21

இவர் ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும். அதாவது உக்ரைன் நாடு இனி ஒருநாளும் NATO அமைப்பில் இணைவோம் என்று நினைத்து கூட பார்க்க மாட்டோம் என்று உலக அளவில் உறுதிமொழி கொடுக்க வேண்டும். இதன் பின் இந்த சண்டை விரைவில் முடிவுக்கு வரும்.


சமீபத்திய செய்தி