உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மார்ச் 19ல் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

மார்ச் 19ல் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி உள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19ல் பூமிக்கு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு, நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் ஆய்வு பணிக்காக சென்றார். ஆனால், அவர் சென்ற ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் 8 மாதங்களாக விண்வெளியில் அவர் சிக்கி உள்ளார்.இந்நிலையில், அவர் மார்ச் 19 ம் தேதி பூமிக்கு திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் விண்வெளிக்குச் சென்ற புட்ச் வில்மோரும் உறுதி செய்துள்ளனர்.மார்ச் 12 ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரு 10 மார்ச் 12ல் சர்வதேச விண்வெளி மையத்திற்கு கிளம்புகிறது. அந்த விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்தில் இணைப்பானதும், அதில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புகிறார்.தற்போது சர்வதேச விண்வெளி மையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் உள்ளார். அந்த பொறுப்புகளை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து, அவர் மார்ச் 19ல் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து கிளம்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

W W
பிப் 16, 2025 08:53

கிரேட் அந்த தெய்வம் உங்கள் பக்கம், உங்களிடமே இருக்கிறது. நல்ல படியாக, வெற்றியுடன், திருப்புவதற்கு எங்களின் வாழ்த்துக்கள்.


J.V. Iyer
பிப் 15, 2025 04:05

அடுத்தமுறை எவனாவது விண்வெளிக்கு செல்ல ஆசைப்படுவானா? பார்த்துக்கலாம்.


Ramesh Sargam
பிப் 14, 2025 22:36

சீக்கிரம் பத்திரமாக அவர்கள் பூமிக்கு திரும்பி வந்து, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும். பிரார்த்தனைகள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 14, 2025 22:30

போன மாதம் வரை மீண்டு வருவாரா என்பதே சந்தேகத்திற்குரியதாக இருந்தது ..... இப்போது தேதி குறித்துத் தகவல் வருகிறது ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை