உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜனாதிபதி மாளிகையை மீண்டும் கைப்பற்றிய சூடான் ராணுவம்

ஜனாதிபதி மாளிகையை மீண்டும் கைப்பற்றிய சூடான் ராணுவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கார்டூம்,: சூடானில் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகையை, அந்நாட்டு ராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uknobeq1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகின்றனர். இருதரப்பினருக்கும் இடையிலான மோதல், கலவரமாக மாறி நாடு முழுதும் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. உள்நாட்டுப் போரில் இதுவரை 60,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 80 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளனர்; 34 லட்சம் பேர் பிற நாடுகளுக்கு சென்றுள்ளனர். இதில், துணை ராணுவ படைக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஆர்.எஸ்.எப்., எனப்படும் கிளர்ச்சி படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தப் போரில், தலைநகர் கார்டூமில் உள்ள ஜனாதிபதி மாளிகை உட்பட பல்வேறு அரசு நிர்வாக கட்டடங்களை துணை ராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர். சமீபகாலமாக, தங்கள் அதிரடி தாக்குதல்கள் வாயிலாக, துணை ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட இடங்களை ராணுவத்தினர் கைப்பற்றி வருகின்றனர். சமீபத்தில், கார்டூமுக்கு அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை ராணுவத்தினர் மீண்டும் தங்கள் வசமாக்கினர். தற்போது, ஜனாதிபதி மாளிகையை அவர்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.'கடவுள் மிகப்பெரியவர்' என்ற முழக்கங்களுடன், ஜனாதிபதி மாளிகை முழுதும் ராணுவ வீரர்கள் சுற்றி வருவது, அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள காட்சிகளில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகும் முன், கார்டூமின் மையப் பகுதிகளில் பல மணி நேரத்துக்கு மேலாக துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
மார் 22, 2025 07:33

அடக்கியாளப்படவேண்டியவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் திறன் இருக்க வாய்ப்பு இல்லை.


ராஜாராம்,நத்தம்
மார் 22, 2025 04:23

செத்து செத்து விளையாடுவது என்பது இதுதான்...


Mani Selvam
மார் 22, 2025 04:14

கையில் ஆயுதம் இருக்கும் வரை,நாடு முன்னேற வாய்ப்பில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை