உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சூடானில் துணை ராணுவப்படையினர் தாக்குதல்: அப்பாவி மக்கள் 43 பேர் பலி

சூடானில் துணை ராணுவப்படையினர் தாக்குதல்: அப்பாவி மக்கள் 43 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கார்டூம்: சூடானில் துணை ராணுவப்படையினர் நடத்திய டிரோன் தாக்குதலில் அப்பாவி மக்கள் 43 பேர் கொல்லப்பட்டனர்.ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான ராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எப் என்ற துணை ராணுவ படைக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. 2023ம் ஆண்டு ஏப்.15 முதல் இரு தரப்பினர் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் அப்பாவி மக்கள் 43 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மோதலை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச அமைப்புகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி போயுள்ளது.இந்நிலையில், எல் பஷர் என்ற நகரில் உள்ள மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்த போது துணை ராணுவப்படையினர் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 43 பேர் கொல்லப்பட்டனர். நிராயுத பாணியான அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கொடூரமான குற்றம் என மனித உரிமை அமைப்புகள், குற்றம் சாட்டியுள்ளன. இந்த தாக்குதலில் அந்த மசூதி நொறுங்கி கிடப்பது மற்றும் அதில் உடல்கள் சிக்கி கிடக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவையும் வெளியிட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ருத்ரன்
செப் 19, 2025 20:21

இஸ்ரேலில் கடந்த வருடம் பாராசூட் வழியாக இறங்கி தாக்குதல் நடத்திய பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகளை இன்று வரை வேட்டையாடுகிறது இஸ்ரேல். இதை பார்த்து கதறுகிறது அனைத்து மனித உரிமை இயக்கங்கள். அப்பாவி பாலஸ்தீனியர்களாம். அதே அப்பாவிகள் தானே ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள். அப்படி என்றால் அடைக்கலம் கொடுப்பவனும் தீவிரவாதிதானே. சரி இஸ்ரேல் செய்வது தவறு என்றே கொள்வோம். இங்கு சூடானில் குண்டு வைத்து கொல்பவர்களும் இஸ்லாமியர்கள். கொல்லப்படுபவனும் இஸ்லாமியர்கள். அதுவும் மசூதியில். இவர்களில் யாருடைய செயலை அவர்களின் கடவுள் கண்டு ஆனந்தமடைவார்.


N Sasikumar Yadhav
செப் 19, 2025 20:00

இந்த அமைதிமூர்க்கத்தானுங்க அமைதியாகவே இருக்க மாட்டானுங்களா


Rajan A
செப் 19, 2025 19:25

ஐயோ சுடானில் நிலையை பார்த்து கொண்டு இருக்க முடியாது. ஓன்றிய அரசே தநாவிற்கு நிதி தர வேண்டும் -₹200க்கு இது போதும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை