உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சுனிதா வில்லியம்ஸ் நலம்: நாசா அறிவிப்பு

சுனிதா வில்லியம்ஸ் நலம்: நாசா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக வெளியான தகவலை மறுத்த நாசா அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக கூறியுள்ளது.ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இதனால், இருவரும் 2025ம் ஆண்டு பிப்., மாதம் தான் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் நீண்ட நாட்களாக விண்வெளி மையத்தில் இருக்கும் அவரின் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாகவும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.ஆனால், இதனை மறுத்து நாசா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mani . V
நவ 08, 2024 05:50

நீங்க சொன்னா நம்பித்தானே ஆகணும்.


Raj
நவ 08, 2024 05:31

கடவுளுக்கு தான் தெரியும்....


J.V. Iyer
நவ 08, 2024 04:43

பயங்கரவாத ஜனநாயக கட்சி ஆட்சி போய்விட்டது. மக்கள் விரும்பும் ட்ரம்ப் ஆட்சி வந்துவிட்டது. எனவே சுனிதா வில்லியம்ஸ் சீக்கிரம் பூமிக்கு திரும்பிவிடுவார்.


அப்பாவி
நவ 08, 2024 03:01

இன்னும் ஏழு ஜன்மத்திற்கும் விண்வெளி பயணம் வாணாம்பாந்னு சொல்லுவாரு.


Ramesh Sargam
நவ 07, 2024 20:57

கமலா ஹாரிஸுக்கு கோவில்களில் வேண்டிக்கொண்டவர்கள், இவருக்கும் வேண்டிக்கொள்ளவேண்டும், பத்திரமாக, நலமுடன் திரும்ப. ஐவரும் இந்திய வம்சாவளியினர். மேலும் ஒரு விண்வெளி விஞ்ஞானி.


Anantharaman Srinivasan
நவ 07, 2024 20:55

இயற்கைக்கு மாறாக விண்வெளியில் பல மாதங்களாக சுற்றிவரும் சுனிதா வில்லியம்ஸ்க்கு எப்படி நார்மல் உடல் நிலை இருக்க முடியும். நிச்சயமா உடல் பாதிப்புயிருக்கும்.


சமீபத்திய செய்தி