உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மார்ச்-16ல் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்: நாசா அறிவிப்பு

மார்ச்-16ல் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்: நாசா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்; விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் இருவரும் மார்ச் 16ம் தேதி பூமிக்கு திரும்புவதாக நாசா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார்.கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் அவரும் பேரி வில்மோரும் விண்வெளி நிலையம் சென்று 8 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தங்கி உள்ளனர்.இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகியோர் 9 மாதங்கள் விண்வெளியில் கழித்த பிறகு,எலான் மஸ்கிற்கு சொந்தமான, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 16ல் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

subramanian
மார் 10, 2025 23:24

பொய் சொல்லி காலத்தை கடத்துகிறார்கள். உண்மை சொல்ல...என்ன பயம்


Appa V
மார் 10, 2025 19:24

ஆறு மாதங்களுக்கு மேலாக எழுந்து நடக்கக்கூட இயலாமல் அவதிப்பட்டிருக்கிறார்கள் ..நம்ம கருத்து சிகாமணிகள் என்ன வேணும்னாலும் எழுதறாங்க


raja
மார் 10, 2025 17:39

எந்த தொழில் நுட்ப கோளாறும் கிடையாது... இது உலகத்தை நம்ப வைக்க அமெரிக்கா நடத்தும் நாடகம்... இதன் அடுத்த முயற்சியாக நிலவிலோ அல்லது செவ்வாயில் மனிதனை கொண்டு விடும் முயற்சி...நிலவுக்கு செல்ல குறைந்தது ஒருமாதம் என்று கணக்கிட்டால் சென்று வர இரண்டுமாதம் பின் அங்கு தங்கி ஆராச்சியோ அல்லது தங்கும் குடிசைகள் கட்டி வாழும் ஆராச்சியை செய்ய ஒரு ஐந்து மாதங்கள் என்று வைத்து கொண்டால் எழு மாதங்கள் விண்வெளியில் இருக்க கூடும்... அதற்கான முயற்சியில் முன்னோட்டம் தான் இது...


Karthik
மார் 10, 2025 18:17

I think so..


Karthik
மார் 10, 2025 17:14

இம்முறையாவது இவர்கள் அனுப்பும் விண்கலம் தொழில்நுட்ப கோளாறு இன்றி பூமி திரும்புமா?? அல்லது அங்கேயே ஓராண்டுக்கு மேல் தங்கி 2 பேரும் சாதனை படைக்கப்போறார்களா?


முக்கிய வீடியோ