உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கனில் பெண்கள் உள்ள வீடுகளில் ஜன்னல்கள் வைக்க தலிபான்கள் தடை

ஆப்கனில் பெண்கள் உள்ள வீடுகளில் ஜன்னல்கள் வைக்க தலிபான்கள் தடை

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் புழங்கும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் ஜன்னல்கள் வைக்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் உள்ள தலிபான்கள், பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண் கல்வி, பெண் சுதந்திரம் போன்றவை அங்கு மறுக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே, ஆப்கனில் பெண்கள் அதிகம் புழங்கும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் ஜன்னல்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தலிபான்கள் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது:பெண்கள் வீட்டின் சமையலறையில், முற்றத்தில் வேலை செய்வதை பார்ப்பது அல்லது கிணற்றில் இருந்து தண்ணீர் சேகரிப்பதை பார்ப்பது ஆபாசமான செயல்களுக்கு வழிவகுக்கும். அதனால், புதிதாக கட்டப்படும் வீடுகளின் முற்றம், சமையலறை, அண்டை வீட்டாரின் கிணறு உள்ளிட்ட பகுதிகளில் ஜன்னல்கள் கட்டக்கூடாது.ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் மேற்கூறிய இடங்களில் உள்ள ஜன்னல்களை சுவர் எழுப்பியோ அல்லது அதை பார்க்க முடியாத வகையிலோ தடை செய்ய வேண்டும். இதை, வீட்டு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதன் வாயிலாக அண்டை வீட்டாருக்கு ஏற்படும் தொல்லைகளை தவிர்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு எச்சரிக்கை:

ஆப்கானிஸ்தான் பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தேசிய மற்றும் மாநில அளவில் செயல்படும் என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா நிறுவனங்களில் சமீப காலமாக பெண்கள் அதிகளவில் பணியில் அமர்த்தப்படுகின்றனர். அவ்வாறு பணிபுரியும் பெண்கள் முறையாக 'ஹிஜாப்' அணியாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இனி, எந்த அரசு சாரா நிறுவனத்திலும் பெண் பணியாளர்கள் இருக்கக்கூடாது. அவ்வாறு அமர்த்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

theruvasagan
டிச 31, 2024 18:05

இங்குள்ள பெண் விடுதலை போராளிகள் ஆப்கானிஸ்தானுக்கு மெழுகுவத்தி ஊர்கோலம் போகத் தயாரானாலும் ஆவாங்களே ஒழிய இங்க மட்டும் போக மாட்டாங்க. எதுக்குன்னா காத்து வேகமா அடிக்கறதால அணைஞ்சு போயிடுமாம்.


Nava
டிச 31, 2024 16:00

ஒரு காலத்தில் கொள்ளையற்களாக இருந்த இந்த மூர்க்கர்கள் , அவர்களிடமிருந்து வேறு என்ன நீங்கள் எதிர்பார்க்க முடியும்.


ஆரூர் ரங்
டிச 31, 2024 11:57

ஆப்கான் கம்யூனிஸ்டு அரசை ஒழிக்க, சோவியத் ரஷ்யர்களை விரட்ட இஸ்லாமிய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் கூட்டத்தை வளர்த்து விட்ட (நேற்று மறைந்த) ஜனாதிபதி ஜிம்மி கார்டர்.மற்றும் ரொனால்ட ரேகன் ஆகியோர் கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்துவிட்டனர். ஆப்கான் என்றுமே முன்னேற வாய்ப்பில்லை. முகலாய அரக்கர்கள் பலரின் சொந்த பூமியாயிற்றே. முற்பகல் செய்தது பிற்பகல் விளைந்து கொண்டிருக்கிறது.


தமிழ்வேள்
டிச 31, 2024 11:11

எல்லாம் ...மயம்


Mani . V
டிச 31, 2024 10:58

யோவ் நம்புய்யா இங்கேயெல்லாம் திமுக வினர்கள் வரமாட்டார்கள். பெண்களின் பாதுகாப்புக்கு பங்கம் வராதுய்யா,


Anonymous
டிச 31, 2024 10:50

எல்லா வீட்டுலயும் பெண்கள் இருப்பார்கள், அப்போ இனிமே அங்கே எந்த வீட்டுக்கும் ஜன்னல் கிடையாது போல....... கொடுமை


M Ramachandran
டிச 31, 2024 09:44

பெண் அடிமையை பற்றி வாய் கிழிய பேசும் கனிமொழி மற்றும் திராவிட கும்பல் இந்த ஆப்கான் பெண்களுக்கு நடக்கும் அநீதியை பற்றி பேச வாய் உண்டா. வாயால வடை சுடும் கும்பல்


Kundalakesi
டிச 31, 2024 09:25

எல்லாத்தையும் மறைத்தால் ....


அப்பாவி
டிச 31, 2024 09:13

அங்கே இருக்கிற ஆம்பளைங்க கண்களை நோண்டி எடுத்துடலாம். கோவாலு. எதையுமே பார்க்கமுடியாது.


Puratchi Thondan
டிச 31, 2024 09:04

வீட்டு வாசலையும் சுவர் எழுப்பி அடைத்துவிட்டால் இன்னும் தொல்லை இல்லாமல் இருக்கலாம், ஒரு சில நாட்களில் தொல்லைகள் இல்லாத இடத்திற்கே சென்றுவிடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை