உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை; வரி விதிப்பது குறித்து டிரம்புக்கு புத்திமதி சொல்கிறது சீனா!

இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை; வரி விதிப்பது குறித்து டிரம்புக்கு புத்திமதி சொல்கிறது சீனா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: ''நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை'' என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zoqxea9d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு பதில் அளித்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைள் பயனற்றவை. எந்த ஆக்கபூர்வமான நோக்கத்திற்கும் உதவாது. நாங்கள் மோதலை விரும்பவில்லை. பிரிக்ஸ் அமைப்பு ஒத்துழைப்பு மற்றும் உலக வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.மோதல் மற்றும் புவிசார் அரசியலை நிராகரிக்கிறது. அரசியல் வற்புறுத்தலுக்கான கருவியாக வரிகளை பயன்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். வரி விதிப்பு நடவடிக்கைகள் எந்த பலனையும் அளிக்காது. அரசியல் அழுத்தம் கொடுக்க வரி விதிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Nada Rajan
ஜூலை 07, 2025 17:29

எவ்வளவு சொன்னாலும் ட்ரம்ப் திருந்த மாட்டார்


SUBRAMANIAN P
ஜூலை 07, 2025 17:12

அமெரிக்காவுல ஒரு பைத்தியக்காரனுக்கு ஓட்டுப்போட்டு அதிபர் ஆக்கி இருக்கானுங்க.


N Srinivasan
ஜூலை 07, 2025 16:28

சொன்னது சரிதான். நான் தான் இந்த உலகுக்கு பெரியவன் என்ற ஆணவம் ஒழியவேண்டும்


Narayanan
ஜூலை 07, 2025 16:26

டிரம்ப் மனநிலை சரியில்லை . சீன அறிவுரையை ஏற்பாரா ?


Karthik Madeshwaran
ஜூலை 07, 2025 15:02

அமெரிக்கா டிரம்ப் - குட்ட குட்ட இந்திய பிரதமர் மோடி குனிய வேண்டாம் . எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. சீனாவிற்கு இருக்கும் தில்லு இந்திய ஆட்சியாளருக்கு இல்லையே ?


Karthik Madeshwaran
ஜூலை 07, 2025 14:59

முன்பு எல்லாம் நரேந்திர மோடி அவர்கள் இந்தியர்களுக்காக யாரிடமும் அடி பணியாதவர் என்று நினைத்தேன். பிறகு அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அமைதியாக இருந்து எதோ ராஜ தந்திரம் செய்கிறார் என்று நினைத்தேன். தற்போது தான் தெரிகிறது ரஸ்யா, சீனாவை போல அமெரிக்காவிற்கு எதிராக, அவர்களின் அரசியல் அழுத்தத்திற்கு எதிராக நமக்கான உரிமையை பெறுவதில் தோற்று, ஆட்டுகின்ற பொம்மை போல. இப்படியே போனால் அமெரிக்கர்களுக்கு இந்தியர்கள் அடிமை சாசனம் எழுதி தான் கொடுக்க வேண்டும் போல.


VJ VJ
ஜூலை 07, 2025 22:05

ஹாஹாஹா....