பயங்கரவாதிகள் தாக்குதல்: பாக்., ராணுவத்தினர் 11 பேர் பலி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ராணுவத்தினர் 11 பேரும், பயங்கரவாதிகள் 19 பேரும் உயிரிழந்தனர்.வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது. அதன்படி, அப்பகுதியில் பாக் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவத்தினர் 11 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 19 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என ராணுவத்தினர் தெரிவித்தனர்.பாகிஸ்தானில், குறிப்பாக கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில், பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு ஆயுதமும், பணமும் கொடுத்து ஆதரிக்கும் பாகிஸ்தான், அதன் மோசமான பின்விளைவுகளை இப்பொழுது எதிர்கொள்வதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.