உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நியூசி.,யில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு

நியூசி.,யில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு

ஆக்லாந்து: பசுபிக் கடலில் உள்ள கிரிபாட்டி தீவுகளில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்திலும் புத்தாண்டு பிறந்தது.ஆங்கில புத்தாண்டு 2025ஐ வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராக உள்ளனர். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டன. வாணவேடிக்கை நடத்தவும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.உலகில் முதலாவதாக, பசுபிக் தீவான கிரிபாட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு முதலில் பிறந்தது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து நாட்டிலும், அடுத்து ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் அடுத்தடுத்து ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. உடனடியாக மக்கள் பட்டாசுகளை வெடித்தும், கேக் வெட்டியும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சமூக வலைதளங்களில் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால், சமூக வலைதளங்களில் புத்தாண்டு தொடர்பான ஹேஷ் டேக்குகள் ' டிரெண்டிங்கில்' உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 31, 2024 19:24

பசுபிக் தீவான கிரிபாட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு முதலில் பிறந்தது ...... என்னது கிரிபாட்டியா ? தலீவர் போஸ்டர் மேல காலனியை வீசி எறிந்த பாட்டியம்மா ஒருவேளை அங்கே போயிருப்பாங்களோ ?? இன்னும் கிடைக்கலியாமே ?


அப்பாவி
டிச 31, 2024 17:34

தோ... எல்லா தலிவர்களும் மங்களம் பொங்கட்டும், அமைதி நிலவட்டும், அது இதுன்னு வாழ்த்தப் போறாங்க. மக்களுக்கு ஒரு நல்லதும் செய்ய மாட்டாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை