உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டைட்டானிக் கேப்டனின் தங்க கடிகாரம்: ரூ.16 கோடிக்கு ஏலத்தில் விற்பனை!

டைட்டானிக் கேப்டனின் தங்க கடிகாரம்: ரூ.16 கோடிக்கு ஏலத்தில் விற்பனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: டைட்டானிக் கப்பலில் சென்ற பயணிகள் 700 பேரை காப்பாற்றிய கேப்டனின் தங்க கடிகாரம், ரூ.16.50 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் 1912 ஏப்ரல் 15 அன்று வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு தனது முதல் பயணமாக சென்று கொண்டிருந்தபோது நடந்த இந்த விபத்தில் 1,500 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது, வரலாற்றில் மோசமான கடல் விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.இந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் அவ்வப்போது ஏலத்தில் விடப்படுகின்றன. அந்த வகையில் கப்பல் கேப்டனின் கடிகாரம் 16.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.ஏலதாரர்கள் கூறியதாவது:இந்த 18 காரட் தங்க கடிகாரம் உயிர்களைக் காப்பாற்றுவதில் கேப்டன் ரோஸ்ட்ரானின் துணிச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழங்கப்பட்டது. ஏனெனில் ரோஸ்ட்ரோன் இல்லாமல், அந்த 700 பேர் உயிர்பிழைத்திருக்க மாட்டார்கள். நியூயார்க்கில் உள்ள அரண்மனையில் மதிய உணவின் போது, கடிகாரத்தை ஆஸ்டரிடம் ரோஸ்ட்ரோன் பெற்றார். இந்த விற்பனையானது டைட்டானிக் கப்பலின் கதையின் மீதான நீடித்த மோகத்தை வெளிப்படுத்தியது.டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட வயலின், 2013ல் ரூ.11.65 கோடிக்கு விற்கப்பட்டது. இந்த வயலின் தான் 11 ஆண்டுகளாக செலுத்தப்பட்ட அதிகபட்ச தொகை என்ற சாதனையைப் படைத்திருந்தது. தற்போது இந்த தங்க கடிகாரம் ரூ.16.50 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.இவ்வாறு ஏலதாரர்கள் கூறினர்.டைட்டானிக் நினைவுப் பொருட்களுக்காக இதுவரை செலுத்தப்பட்ட மிக உயர்ந்த தொகை இது என்று அமெரிக்காவின் ஏலதாரர்களான ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் மற்றும் வில்ட்ஷயர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
நவ 17, 2024 20:17

ஓகே இதனால் என்ன பிரயோஜனம்???நாட்டுக்கு???நாட்டு மக்களுக்கு???அட்லீஸ்ட் வாங்கினவனுக்கு????விற்றவனுக்கு ஓகே???வாங்கினவன் என்ன செய்வான்???இரண்டு வருடம் வைத்துக்கொண்டு auction ல் விற்று விடுவான் ரூ 18 கோடிக்கு???


Barakat Ali
நவ 17, 2024 12:30

வாங்கலாம் ன்னு நினைச்சேன்... ஆனா ஒரிஜினலா ன்னு எப்படி உறுதிப்படுத்திக்கிறது ....


Pandi Muni
நவ 17, 2024 14:54

வாங்கலாம்தான் அதுக்கு ஒன்கோல்லேருந்து வந்திருக்கணும்


சமீபத்திய செய்தி