உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் தொடரும் துயரம்: காட்டுத்தீ பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்வு

அமெரிக்காவில் தொடரும் துயரம்: காட்டுத்தீ பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்வு

வாஷிங்டன்: லாஸ் ஏஞ்சலசில் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. காற்றுத்தீ பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ ஏற்பட்டது. பாலிசேட்ஸ், ஈட்டன், அல்டாடெனா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 'வரும் நாட்களில் நிலைமை மோசமடையும். மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். காற்று அதி வேகமாக இருப்பதால் தீப்பிழம்புகள் விரைவில் பரவுகின்றன. இதனால் தீயை அணைக்கும் பணியை கடினமாக உள்ளது என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. 23,700 ஏக்கர் (9,500 ஹெக்டேர்) எரிந்துவிட்டது. மேலும் 11 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது.மிகவும் தீவிரமாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. உடல்களை தேடும் பணியில், மோப்ப நாய்கள் உதவியுடன் நடந்து வருகிறது. வீடுகளில் இருந்து திருட தீயணைப்பு வீரராக உடையணிந்த ஒரு திருடன் உட்பட, கொள்ளையர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். வெளியேற்றப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் நகரம் மீண்டும் கட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். காட்டுத் தீ காரணமாக, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் காட்டுத் தீ காரணமாக கடும்புகைமூட்டமாக பல பகுதிகளில் காணப்படுகிறது. இதனால், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என எச்சரித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

babu
ஜன 15, 2025 23:28

ஒரு டாலர் இனிமேல் ஒரு ரூபாய் தான் மதிப்பு. வாங்கினா வாங்கு வாங்காட்டி போடா டரும்மு


user name
ஜன 13, 2025 15:18

காசா ல் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் நடந்த மோதலில் 99 சதம் அப்பாவிகள் தான் கொல்லப்பட்டனர், அப்போது ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் வுட் , பாலஸ்தீனர்கள் அனைவரையும் கொள்ள வேண்டும் , அவர்கள் வீட்டை அழிக்க வேண்டும் என்று ட்விட்டரில் கூறியிருந்தார் , இப்போது அவர் வீடு எரிந்து டிவியில் அழுதுகொண்டு இருக்கிறார், இதான் கர்மா


Mrs. Marie-Thérèse Evariste
ஜன 13, 2025 12:26

all French newspapers say that all the multi-millionners houses Boly wood film stars, great grand businessmen, etc, etc ..... were devastated to ashes in this fire. Newspapers do not talk about the poor and downtrodden peoples sufferings or their loss in such a great grand fire ...... Also, such personalities photos, whose houses were reduced to ashes, appear / are put up in the French newspapers.


nisar ahmad
ஜன 13, 2025 11:45

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் எத்தனை தேசத்தை எரித்திருப்பார்கள் காசாவின் பத்தாயிரம் பிச்சுகள் எரிந்து சாம்பலானார்கள் அவர்களின் கண்ணீர் சும்மா விடுமா?.இது எல்லோருக்கும் பொருந்தும்.பொருத்திருங்கள்! இங்கும்.


Bahurudeen Ali Ahamed
ஜன 13, 2025 13:38

சகோ, எல்லா அமெரிக்க மக்களும் பாலஸ்தீன் படுகொலைகளை ஆதரிக்கவில்லை, சொல்லப்போனால் பாலஸ்தீன் மக்களுக்காக பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தியிருக்கிறார்கள், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கக்கூடாது என்றும் போராட்டம் நடத்தினார்கள், என்ன செய்ய பாலஸ்தீன் படுகொலைகள் எல்லாம் அரசியல்வாதிகளின் சுயநலம்


ashokkumar ashok
ஜன 13, 2025 11:16

காசா வும் பாலஸ்தீனமும் நினைவுக்கு வருகிறது ...


Bahurudeen Ali Ahamed
ஜன 13, 2025 11:45

உண்மைதான் சகோ, ஆனால் அப்பாவி அமெரிக்க மக்கள் என்ன செய்வார்கள் பாவம், வீடுகளை இழந்து குழந்தை குட்டிகளுடன் தெருவில் நிற்கும்போது மனது வலிக்கிறது, அரசியவாதிகள் தங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக முக்கியமாக நெதன்யாகு ஆடும் ஆட்டம் பாலஸ்தீன் படுகொலைகள், நிச்சயமாக எந்த ஒரு தாயும் தகப்பனும் பாலஸ்தீனில் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் கொலை வெறியாட்டத்திற்கு ஆதரவளிக்க மாட்டார்கள் அது அமெரிக்கனுக்கும் பொருந்தும்


Bahurudeen Ali Ahamed
ஜன 13, 2025 10:25

வாழ்ந்து அனுபவித்து நம் அனைத்து நினைவுகளையும் தாங்கி நிற்கும் வீடுகளை இழப்பது மிகக்கொடுமையானது, இதுவும் கடந்து போகும் மீண்டு வாருங்கள், உணவுக்காக நிற்கும் குழந்தைகளை பார்க்கும் போது மனது கனக்கிறது


kantharvan
ஜன 13, 2025 11:46

யார் துயர் உற்றாலும் அது நம்முடைய துயர் என எண்ணுபவன் உண்மையான இஸ்லாமியன் அடுத்தவன் துயரத்தில் இன்பம் காண்பவர்கள் மனித பிறவிகள் அல்லர் இனியாவது திருந்துவார்களா?? விஷ ஜந்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை