உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தேவையற்ற அரசு ஊழியர்கள் பணிநீக்கம்; கெடு விதித்தார் டிரம்ப்

தேவையற்ற அரசு ஊழியர்கள் பணிநீக்கம்; கெடு விதித்தார் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், மார்ச் 13ம் தேதிக்குள் தேவையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். அரசு நிர்வாகத்தில் செலவுகளை குறைக்கவும், நிர்வாகத்தை சீரமைக்கவும், டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இதன் தலைவராக, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார்.இந்தத் துறை, ஏற்கனவே, பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்களை விடுமுறையில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தவிர, பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது, மார்ச் 13ம் தேதிக்குள், தேவையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் உத்தரவிட்டார். அரசு ஊழியர்களில் பலர், வேலையை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும், இதனால் அரசுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். ஒவ்வொரு அரசு துறையும், தங்கள் ஊழியர்களில் எத்தனை பேரை வேலை நீக்கம் செய்ய முடியும் என்ற திட்டத்தை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கூட்டத்தில் பங்கேற்ற எலான் மஸ்க் அதிகமான செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த ஆண்டில் பட்ஜெட்டில் 1 டிரில்லியன் டாலர்கள் திட்டங்கள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என எலான் மஸ்க் தெரிவித்தார். இதற்கிடையே, பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என டிரம்ப் உறுதிப்படுத்தி உள்ளார். டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, அரசு ஊழியர்களில் 1 லட்சத்திற்கு அதிகமானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Muraleedharan.M
பிப் 27, 2025 11:57

இது இங்கும் வரணும். வர முடியாது . எனெனில் இங்கு அவர்கள் யாவரும் அரசியல்வாதிகளுக்கு வேண்டியவர்கள்.


Uuu
பிப் 27, 2025 10:56

Trump unfit for america


Nagarajan D
பிப் 27, 2025 10:08

அடப்போங்கப்பா எங்க நாட்டில அப்படி செய்தால் அரசு ஊழியர் யாருக்குமே வேலை இருக்காது எல்லோரும் தண்டத்துக்கு தான் சம்பளம் வாங்குறானுங்க


vbs manian
பிப் 27, 2025 09:36

மிக மிக தேவையானதை செய்கிறார்.


RAVINDRAN.G
பிப் 27, 2025 09:16

இந்தியாவில் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் ஊழல் பேர்வழிகள். மேலும் சம்பளம் பத்தவில்லை என்று அரசியல் சங்கங்களின் பின்னணியில் சலுகை கேட்டு போராடும் சோம்பேறிகள் . நல்ல இளைஞர்கள் பல பேருக்கு ஒரு அரசு ஊழியர் வேலை பார்க்கும் மாத சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு கொடுத்தாலும் உண்மையாக உழைப்பார்கள். முக்கியமாக இட ஒதுக்கீடு திறமை உள்ளவர்களை புறக்கணிக்கிறது. ஆகவே அரசு அனாவசிய செலவினங்களை இலவசங்களை ஒழிக்கவேண்டும்.


Barakat Ali
பிப் 27, 2025 09:00

இந்தியாவில் எப்போ ????


Laddoo
பிப் 27, 2025 10:30

த்ராவிஷ கட்சிகள் ஒழிந்து அண்ணாமலையார் ஆட்சி மலரும்போது சோம்பேறி ஊழியர்களும் லஞ்சபேய்களும் கட்டம் கட்ட படுவார்கள்.


முக்கிய வீடியோ