உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் பதில் தாக்குதல் பலவீனமானது: 13 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக டிரம்ப் தகவல்!

ஈரான் பதில் தாக்குதல் பலவீனமானது: 13 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக டிரம்ப் தகவல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''அமெரிக்க தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல் மிகவும் பலவீனமானது. ஈரானின் 14 ஏவுகணைகளில், 13 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரான் அணுசக்தி நிலையங்களில் தாக்குதல் நடத்தினோம். இதற்கு, அமெரிக்கா மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதல் பலவீனமானது. அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். அதை மிகவும் திறம்பட எதிர்கொண்டோம். ஈரான் ஏவிய 14 ஏவுகணைகளில், 13 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r8bxka2c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு ஏவுகணை விடுவிக்கப்பட்டது. அது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தவில்லை. எந்த அமெரிக்கர்களும் பாதிக்கப்படவில்லை. எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வெறுப்பு இருக்காது என்று நம்புகிறேன். தாக்குதல் நடத்த போகிறோம் என்பதை எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காக ஈரானுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதனால் யாரும் உயிரிழக்கவோ, யாரும் காயமடையவோ இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Yasararafath
ஜூன் 24, 2025 14:36

டிரம்ப் சரியாக பேசுகிறாரா


தியாகு
ஜூன் 24, 2025 14:31

நான் ஈரான் ஆதரவாளி அல்ல. அகிம்சைவாதி... ஹி...ஹி...ஹி...


Tetra
ஜூன் 24, 2025 13:54

சொல்லிக்க வேண்டியதுதான்


தஞ்சை மன்னர்
ஜூன் 24, 2025 11:01

நீ பயத்துடன் இருந்தது உண்மைதானே அப்புறம் என்ன மீசை மீது மண் ஒட்டவில்லை கதை அவங்கதான் திருப்பி அடிச்சிட்டாங்களே அப்புறம் என்ன போலி வீரம் அடித்த அடி விழும் என்று அறிந்த பின் போர் நிறுத்தம் என்று சொல்ல அசிங்கமாக இல்லை


Thravisham
ஜூன் 24, 2025 11:36

டிரம்ப் ஓர் அவசர குடுக்கை அவ்வளவே ஆனால் அவர் கொடுக்கும் ஒவ்வொரு அடியும் இடி போல விழுதே. முல்லாக்கள் ஒழிந்தே ஆகணும். உள்ளிருந்தே புரட்சி கொரில்லா யுத்தம் ஆரம்பிக்கணும்


சேகர்
ஜூன் 24, 2025 09:53

இந்த தாக்குதல் முன்கூட்டியே எச்சரித்தும் 14இல் ஒன்றாவது உங்கள் இலக்கை தாக்க முடியும் என எச்சரிக்கவே. எச்சரிக்காமல் தாக்கினால் 14இல் பாதியாவது உங்கள் படைத்தளத்தை தாக்க முடியும் என உணர்த்தவே. ஈரானை பொறுத்த வரை (நான் ஈரான் ஆதரவாளி அல்ல. அகிம்சைவாதி) அந்த நாட்டை சுற்றி பல நாடுகளில் அமெரிக்கா படைத்தளங்கள் உள்ளன. அதனால் தான் வளைகுடா நாடுகளை அமெரிக்காவால் அச்சுறுத்த முடிகிறது. ஆகவே இந்த படைத்தளங்களை அழிக்க ஈரான் நினைக்கிறது என நினைக்கிறேன்.


அப்பாவி
ஜூன் 24, 2025 07:32

இவர் சொல்றதை 10 ஆல் பெருக்கி 200 ஆல் வகுத்து நூறக் கழிச்சிக்கணும்.


மீனவ நண்பன்
ஜூன் 24, 2025 07:41

அதுக்குள்ள நீங்க ....


புதிய வீடியோ